ஆப்கானிஸ்ஹானில் பயங்கர நிலநடுக்கம்: 22 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்ஹானில் பயங்கர நிலநடுக்கம்: 22 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானிள் மேற்குப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழந்ததாகவும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் சங்கம் தெரிவித்ததாவது:

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் ஏற்பட்டன.மாகாண தலைநகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700-க்கும் மேற்பட்ட வீடுகள், மற்ற கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது வரை குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பிற்பகலில் முதல் நிலநடுக்கமும், தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 2வது நில நடுக்கமும் ஏற்பட்டது. காதிஸ் மற்றும் முகர் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களால், ஆப்கானிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும், அங்கு பல குடியிருப்புகள் உறுதியானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

-இவ்வாறு அமெரிக்க புவியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com