அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசாக கிடைத்த புது கமாண்டர்: வைரல் வீடியோ!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசாக கிடைத்த புது கமாண்டர்: வைரல் வீடியோ!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசளிக்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு கமாண்டர் என்று பெயரிட்டுள்ளதாகக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் புதிய உறுப்பினரான அந்த நாய்க்குட்டியுடன் அதிபர் பைடன் பந்து வீசி விளையாடும் படக்காட்சியையும், வாக்கிங் செல்லும் காட்சியையும் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இக்காட்சிகள் வைரலாகியுள்ளது.

இந்த நாய்க்குட்டியை ஜோ பைடனுக்கு பிறந்த நாள் பரிசாக அவரது சகோதரர் ஜேம்ஸ் பைடன் தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பைடன் அன்புடன் வளர்த்து வந்த சேம்ப் என்ற நாய் கடந்த ஜூன் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து வெள்ளை மாளைகையின் புதிய வரவாக கமாண்டர் வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com