அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில், 1993 முதல் 2001-ம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தவர் பில் கிளிண்டன். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாவது:

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 75 வயதான அவருக்கு கொரோனா அல்லாத தொற்று ஏற்பட்டுள்ளாதால், அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனளிக்கிறது. அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் விரைவில் வீடு திரும்புவார் என நம்புகிறோம்.

இவ்வாறு அநத மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com