உலகின் சில நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்க கூடிய போர் சூழல், பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய காரணங்களால் இந்தியா அந்நிய முதலீட்டை பெறுவதில் சரிவை சந்தித்து இருக்கிறது என்று தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டு துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக அத்துறை வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கை விவரம், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் அரையாண்டு பகுதி வரை மிகப்பெரிய அளவில் சர்வை சந்தித்திருக்கிறது. இதற்கு காரணம் உலகின் சில நாடுகளிடையே ஏற்பட்டிருக்கக் கூடிய போர் சூழல், பருவநிலை மாற்றம், இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொடரும் கலவரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் தற்போது தயக்கம் காட்டுகின்றன.
இதன் காரணமாக இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 2,048 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது 24 சதவீதம் குறைவாகும். மேலும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டில் 40.55 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு சரிவை கண்டிருக்கிறது. இவ்வாறு 928 கோடி ரூபாய் மட்டுமே இந்தியா அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், மொராசிஸ் போன்ற நாடுகளினுடைய அந்நிய நேரடி முதலீடு குறைந்திருக்கிறது. அதே சமயம் நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி, ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்திருக்கிறது. மேலும் கணினி மற்றும் மென்பொருள், தொலைத்தொடர்பு, ஆட்டோ பார்மா போன்ற நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு சரிவை சந்தித்திருக்கிறது. அதே சமயம் கட்டுமான துறை மீதான அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீடை பெறும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்த மாநிலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நிதியாண்டில் 795 கோடி முதலீடைப் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 800 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இடத்தில் கர்நாடகம் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உள்ளன. சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் முதலீடு செய்ய நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன. மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்க விரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.