Singapenne serial  
சின்னத்திரை / OTT

சிங்கப்பெண்ணே: ஒன்று சேர்ந்த ஆனந்தி அன்பு… ஏற்றுக்கொள்வாரா மகேஷ்?

பாரதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அன்புவும் ஆனந்தியும் எப்போது சேர்வார்கள் என்பதை நோக்கித்தான் கதை நகர்ந்து வந்தது. ஒருவழியாக அந்த விஷயம் இப்போது வந்துள்ளது.

சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் என ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படுகிறது. அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வருகிறார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். 

இப்படியான நிலையில் இப்போது ஆனந்திக்கு உண்மை அனைத்தும் தெரியவந்திருக்கிறது. அதாவது அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்கு தெரிய வந்திருக்கிறது. நேற்று அன்பைத் தேடி பஸ் ஸ்டாண்டுக்கு போன ஆனந்தி, அன்புவை பஸ்ஸில் இருந்து இறங்கச் சொல்கிறார். பின் ஆனந்தி அன்புவிடம் அழகன் இருக்கிறானா என்று கேட்கிறார். அன்பு இல்லை என்று சொன்னவுடன், ஆனந்தி பளார் என்று கண்ணத்தில் அடிக்கிறார். மீண்டும் ஆனந்தி கேட்க, இல்லை என்று சொன்னதும் மறுபடியும் அன்புவை அடிக்கிறார்.

பின்னர் ஆனந்தி செயினை எடுத்துக்காட்டி அப்போ இது என்ன என்று கேட்கிறார். அன்பு எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்கிறார். அதற்கு ஆனந்தி நீ தான் அழகன் என்று சொன்னால் நான் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று நினைக்கிறாயா? ஏன் அப்படி செஞ்ச என்று கேட்கிறார். இவ்வளவு நாள் அழகனை நான் காதலிக்கிறேனா? என நிறைய பேர் கேட்டு இருக்கிறார்கள். அது எதற்குமே என்னிடம் பதில் இருந்ததில்லை.

ஆனால் இப்போது சொல்கிறேன். நான் உன்ன காதலிக்கிறேன் என்று ஆனந்தி தனது காதலை கூறிவிடுகிறார். அன்பு அழுதுக்கொண்டே ஆனந்தியை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

மறுபக்கம் மகேஷின் அம்மா மித்ராவுக்கு போன் செய்து அன்பு தான் அழகன் என்று மகேஷை நீ நம்ப வச்சியா? மகேஷ் வீட்டில் ரொம்பவும் சாதாரணமாக நடந்து கொள்கிறானே என்று கேட்கிறார். அதற்கு மித்ரா, மகேஷ் தற்போது அன்பு மற்றும் ஆனந்தி மீது கோபத்தில் உள்ளார். மேலும் ஆனந்தி இன்னைக்கு கம்பெனியில் கருணாகரனை தள்ளிவிட்டு இரும்பு கம்பியால் குத்தப் போயிருக்கிறாள் என்று சொல்கிறார்.

இதனை மித்ரா மகேஷிடம் போட்டுக்கொடுக்கப் போகிறாள். அப்போது மகேஷ் கடுப்பாகி நான் நிறைய பேருக்கு இடம் கொடுத்துட்டேன் என்று கூறுகிறார்.

இதனையடுத்து மகேஷ் ஆனந்தியை காதலிக்கும் விஷயம் பற்றி அன்பு ஆனந்தியிடம் கூறுகிறார்.

இன்றைய ப்ரோமோவில், அன்பு ஆனந்தி இருவரும் தாங்கள் காதலிக்கும் விஷயத்தைப் பற்றி மகேஷிடம் கூறலாம் என்று போகிறார்கள். அவர்கள் இருவரும் இருந்த கோவிலுக்கே மகேஷ் மற்றும் மித்ரா இருவரும் வந்துவிடுகிறார்கள். அப்போது அந்த இடத்திற்கு வந்த மித்ரா என்ன மகேஷ் பாத்துட்டு இருக்க அவனை அடி என்று சொல்கிறாள். ஆனால் மகேஷ் எதிர்பாராத விதமாக மித்ராவை கன்னத்தில் பளார் என்று அடிக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT