தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
1987 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது வரை தமிழ் சினிமாவில் பேசப்படும் படங்களின் வரிசையில் நாயகனுக்கு தனி இடம் உண்டு.
இந்த நிலையில் மிக நீண்ட இடைவேலைக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் மூவிஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக படத்தை உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
படத்திற்கான முதல் கட்ட தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் செயல்படும் முன்னணி நிறுவனத்தில் மேற்கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. நடிகை அபிராமி விருமாண்டி படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். மேலும் இவர் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அபிராமி திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகும் தக்லைப் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், சின்னத்திரையில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.