ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால்,S. J சூரியா, ரிது நடித்து வெளிவந்துள்ள படம் மார்க் ஆன்டனி. ஜாக் என்ற தாதாவின் அரவணைப்பில் வளரும் இளைஞன் மார்க்.. காலத்தை கடந்து செல்லும் டைம் ட்ராவல் தொலைபேசி மார்க்கிற்க்கு கிடைக்கிறது. இந்த கருவி மூலம் தன் தந்தை ஆன்டனியை கொன்றது ஜாக்தான் என்று தெரிந்து ஜாக்கை கொலை செய்து விடுகிறான்.
நிகழ் காலத்தில் ஜாக்கின் மகன் மதன் மெக்கானிக்காக இருக்கிறான். மதன் இதை மாற்ற முயற்சிக்கிறான். கொஞ்சம் பிசகினாலும் குழப்பினாலும் புரியாமல் போய்விடக்கூடிய கதையில் ஒரு பரபரப்பான திரைக்கதையை அமைத்து தந்துள்ளார் ஆதிக். கதை 1995 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் படம் மாறி மாறி செல்கிறது. இருந்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.படம் டான் படமாக இருந்தாலும் மைய்ய நீரோட்டமாக நகைசுவைதான் இருக்கிறது.
படத்தின் கதை நடக்கும் காலங்களில் வெளிவந்த நினைத்த தை முடிப்பவன், எட்டுப்பட்டி ராசா, தூங்காதே தம்பி தூங்காதே இப்படி பல படங்கள் இப்படத்தின் கதை காலத்திற்கு கொண்டு செல்கின்றன. எட்டுப் பட்டி ராசா படத்தில் வரும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் சிறப்பாக ரீ மிக்ஸ் செய்யப்பட்டடுள்ளது.
விஜய்முருகனின் ஆர்ட் டைரக்ஷனில் 1970 மற்றும் 1990 களில் பயன்படுத்தபட்ட கார்கள், பொருட்கள் வீடு, கிளப் என பார்க்கும் அனைத்து அம்சங்களும் நம்மை அந்த கால கட்டத்தை கண் முன் கொண்டு வந்து விடுகிறது. ஜி. வி. பிரகாஷ் இசைக்கு மிகவும் சிரமப்படவில்லை. படம் நடக்கும் கால கட்டத்தில் வந்த இசையையே தன் படத்திற்கும் பயன்படுத்திகொண்டுவிட்டார். சில்க் சிமிதா வை மீண்டும் திரைக்கு வர வைத்துள்ளார் டைரக்டர். இந்த சிலக்கை கவர்ச்சியாக இல்லாமல் பரிதாபத்திற்க்கு உரி யவராக காட்டி உள்ளார் டைரக்டர்.
சில்க், தூர்தர்சன், பெப்சி உமா, பழைய ரேடியோ பெட்டி செய்தி வாசிப்பாளர் நிஜந்தன் என மார்க் ஆன்டனி படமே ஒரு டான் கதைக்குள் ரெட்ரோ படமாக வந்துள்ளது. S. J. சூர்யாவை நடிப்பு அரக்கன் என்று டைட்டிலில் போடுகிறார்கள். இந்த அரக்கன் பல படங்களில் நடித்துள்ளதை போலவே பல காட்சிகளில் நடித்துள்ளார். வயதான தோற்றத்தில் வரும் போது நடிகர் சுருளி ராஜனை இமிடேட் செய்கிறார். விஷால் நடிப்பில் புதிதாக முயற்சி செய்துள்ளார். குரலை மாற்றி பேச முயற்சித்துளார். ஆனால் செயற்கையாக உள்ளது. டான், டைம் ட்ராவல், நகைச்சுவை என ஒரு முக்கோண கதை படமாகவும், மாறுபட்ட திரைக்கதையிலும் சூப்பர் டான் என்று சொல்ல வைக்கிறான் மார்க் ஆன்டனி