வெள்ளித்திரை

சொல்லொணா வலியைத் சுமந்திருக்கும் ராசா கண்ணு பாடல்!

எல்.ரேணுகாதேவி

மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலுவின் குரலில் வெளியாகி உள்ள ராசா கண்ணு பாடல் சொல்லொணா வலியைத் சுமந்திருக்கும் சோகத்தின் வலியை ரசிகர்கள் மனதில் கடத்துகிறது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், தற்போது அமைச்சராக உள்ள உதயநிதியின் திரைவாழ்க்கையில் இறுதியான படமாக மாமன்னன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார்.

வலிகளை சுமந்துள்ள பாடல் வரிகள்

“பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்ற வாசகத்துடன் பாடல் வீடியோ தொடங்குகிறது. ‘தந்தானத் தானா...’ என தொடங்கும் வடிவேலுவின் குரல் உற்சாகத்தை கூட்டுகிறது. பின்னர் வரும் பாடல் வரிகள்..

“மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

தவுலெடுத்து தாளம் அடி ராசா…

நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

தவுலெடுத்து தாளம் அடி ராசா

நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

குச்சிக்குள்ள கெடந்த சனம்

கோனி சாக்குலா சுருண்ட சனம்

பஞ்சம் பசி பார்த்த சனம்

படை இருந்தும் பயந்த சனம்

பட்ட காயம் எத்தனையோ ராசா..

அத சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா..

ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா

ஆறிடுமோ… ராசா கண்ணு

காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா

நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா

காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா

நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா

நடந்த பாதை அத்தனையிலும் ராசா

அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா

திக்குதெச தெரியலயே ராசா

அட தேடி திரியுறோமே ராசா

பட்ட காயம் எத்தனையோ ராசா

அத சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா

மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

தவுலெடுத்து தாளம் அடி ராசா

நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

தவுலெடுத்து தாளம் அடி ராசா

நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

குச்சிக்குள்ள கெடந்த சனம்

கோனி சாக்குலா சுருண்ட சனம்

பஞ்சம் பசி பார்த்த சனம்

படை இருந்தும் பயந்த சனம்

பட்ட காயம் எத்தனையோ ராசா

அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா

ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா

ஆறிடுமோ… ராசா கண்ணு!

யுகபாதி வரியில் எழுதப்பட்டுள்ள இந்த பாடல் வரிகளை.. வரிகள் என சொல்வதைவிட வலிகள் என்றதோன் சொல்லத் தோன்றுகிறது. அதேபோல், பொதுவாக நாம் எதிர்பார்க்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இருந்து மாறுபட்ட கிராமத்து இசையை வழங்கியுள்ள ஏஆர்ஆர். மாமன்னன் படத்தின் ராசா கண்ணு பாடல் வெளியான 20 மணிநேரத்திற்கு உள்ளாகவே 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாடலை கேட்டுள்ளனர். அதேபோல், ட்விட்டர் வலைதள ட்ரெண்டிங்கில் முதலிடத்தையும் பிடித்துள்ளது ராசா கண்ணு…

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT