வெள்ளித்திரை

"இது தானா சேர்ந்த கூட்டம்" விஜய்யின் செல்ஃபி வீடியோவில் அலப்பறை செய்த ரசிகர்கள்!

விஜி

கேரளாவில் விஜய்யை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலுக்குத் தாவிய நடிகர் விஜய், தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. 'GOAT' படத்தின் போஸ்டர்கள் வெளியானதன் மூலம், விஜய் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், 'GOAT' படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜய் கேரளாவிற்கு சென்றிருந்தார். கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தை போன்றே விஜய்யின் படம் ரிலீசாகும் முதல் நாளே பேனர், போஸ்டர் எல்லாம் வைப்பார்கள். அப்படி, விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூடியதால், விஜய்யின் கார் ரசிகர்கள் மத்தியில் தத்தளித்தது. தொடர்ந்து கூட்ட நெரிசலால் விஜய்யின் கார் கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கிய காட்சிகளும் வைரலானது.

இந்த நிலையில், தினசரி ஷூட்டிங் நடைபெறும் க்ரீன் பீல்டு விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் விஜய்யை காண கூடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய், கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். பின்னர் அவர்களுக்கு முத்தங்களை பறக்க விட்டு, சில நிமிடங்கள் உரையாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இது போன்று தமிழகத்திலும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து இணையத்தை தெறிக்க விட்டார். தற்போது இது எல்லாம் டிரெயிலர் தான் என்ற அளவுக்கு கேரள ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு அன்பை பொழிந்து வருகின்றனர்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT