சுரேஷ் ரவி  
வெள்ளித்திரை

‘நந்திவர்மன்’ சொல்லும் ரகசியங்கள்!

லதானந்த்

சோழர்களின் பெருமையைச் சொல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்லவர்களின் வரலாற்றை சொல்லும் முதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘நந்திவர்மன்’ திரைப்படம்.

அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய பெருமைகளையும், ரகசியங்களையும் வெளிக்கொண்டு வரும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

சுரேஷ் ரவி

ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாகவும் ஆஷா கவுடா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன?

‘’சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்தச் சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிற்து.

அதனால்தான் இன்றளவும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்’’ என்று கதையைக் கோடிகாட்டினார், இயக்குனர் பெருமாள் வரதன்.

இந்த திரைப்படத்தில் நந்திவர்மனின் புதைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக வரும் தொல்லியல் துறையினர் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

அதன் பின்னணி என்ன என்பதை சுவாரஸ்யமான வரலாற்றுக் கதையுடன், தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் பெருமாள் வரதன் இயக்கியிருக்கிறார் பெருமாள் வரதன்.

தயாரிப்பாளர் அருண்குமார் கூறுகையில், ‘’ நந்திவர்மன் படத்தை எடுத்து முடிக்க சுமார் ஒரு வருடம் ஆனது. அதற்குக் காரணம், படத்தைத் தரமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இந்த படம் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும்” என்றார்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT