Face Mask 
அழகு / ஃபேஷன்

Bottleguard Facemask: சருமத்தை பொலிவாக்கும் சுரைக்காய் ஃபேஸ் மாஸ்க்!

பாரதி

சருமத்தை பாதுகாப்பதும் அழகாக்குவதும் நம்முடைய முதல் மற்றும் முழு கடமையாகும். பல பிரச்சனைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், சில இயற்கை வழிகளைப் பின்பற்றுவது அவசியம். அந்தவகையில் சுரைக்காயை நம் முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

வீட்டிலேயே ஃபேஸ் பேக் போட பல இயற்கை வழிகள் உள்ளன. அதில், நமக்குத் தெரியாத பல வழிகளும், நம் முகத்தை ஜொலிக்க வைக்கும் வழிகளும் ஏராளம். அந்தவகையில், சுரைக்காய் வைட்டமின்களைக் கொண்டுள்ளதோடு நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு சருமத்திற்கும் அதிக பயன்களைத் தரும்.

முதலில் சுரைக்காயை முல்தானி மிட்டியுடன் சேர்த்துப் போடலாம். பொதுவாக, முல்தானி மிட்டி முகச் சருமத்திற்கு அதிக பயன்களை தரும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதுவும் இதனை சுரைக்காயுடன் சேர்த்து பயன்படுத்தினால், சருமம் குளிர்ச்சியாகவும், உடனே பொலிவைத் தரக்கூடியதாகவும் இருக்கும்.

சுரைக்காய், முல்தானி மிட்டியை எப்படி பயன்படுத்துவது?

முதலில் சுரைக்காயை நன்றாக அரைத்து சாறை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த சாறுடன் முல்தானி மிட்டி சேர்த்து கலக்கவும். அந்தக் கலவையை முகத்தில் தடவி நன்றாக உலர வைக்கவும். காய்ந்தவுடன் கழுவிவிடலாம். இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால், முகம் எப்போதும் பொலிவிழக்காமல் இருக்கும்.

அதேபோல் சுரைக்காயை வெள்ளரிக்காயுடன் சேர்த்து பயன்படுத்தலாம். வெள்ளரிக்காவும் குளிர்ச்சியானது என்பதால், இதுவும் சருமத்தை குளிர்ச்சியாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ளும்.

சுரைக்காய் வெள்ளரிக்காய் பயன்படுத்தும் முறை:

வெள்ளரிக்காய் மற்றும் சுரைக்காயை நன்றாக நறுக்கி, மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அதனை வடிகட்டியாலோ அல்லது துணியாலோ நன்றாக வடிகட்டி நீரை தனியாகப் பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த நீரை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிரித்தெடுத்த அனைத்து நீரையும் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பயன்படுத்துங்கள். பின்னர் நன்றாக முகத்தை கழுவினால், முகம் பொலிவாக மாறும். இதனையும் வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ச்சியாக செய்து வரலாம்.

சுரைக்காய் வைத்து இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்தோ அல்லது மாற்றி மாற்றியோ செய்து பாருங்கள். உடனே ரிசல்ட் கிடைக்கும்.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT