Steps to keep your legs beautiful 
அழகு / ஃபேஷன்

உங்கள் கால்களை அழகாக மாற்ற சில டிப்ஸ்! 

கிரி கணபதி

கால்கள் நம் உடலின் மிகவும் முக்கியமான பாகம்.‌ நாம் நடக்க, ஓட, குதிக்க என அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் கால்கள் உதவுகின்றன. ஆனால், அன்றாட வாழ்க்கையில் கால்களை முறையாகப் பராமரிப்பதை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். அழகான முகம் மட்டுமின்றி, அழகான கால்களும், நம் மனதிற்கு நம்பிக்கையையும், சுயமரியாதையுயும் தரும். கால்களின் அழகை மேம்படுத்துவதற்கான சில எளிய வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

கால்களைப் பராமரிக்கும் வழிமுறைகள்: 

கால்களை தினமும் சோப்பினால் கழுவி சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக, விரல் நகங்களில் அழுக்கு படிவதைத் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைத்த பின்பு மென்மையான துணியால் தேய்த்து கழுவுவது நல்லது. 

வரத்திற்கு ஒருமுறை கால்களை ஸ்கிரப் செய்வது, இறந்த செல்களை நீக்கி கால்கள் மென்மையாக மாற உதவும். இதற்கு நீங்கள் கடைகளில் கிடைக்கும் ஸ்கரப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப் தயாரிக்கலாம். 

கால்களை ஈரப்பதமாக வைத்திருக்க தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் மாய்ஸ்சரைஸர் அல்லது லோஷன் தடவ வேண்டும். குறிப்பாக, குளிர்காலத்தில் கால்கள் வறண்டு போகாமல் இருக்க, இது மிகவும் முக்கியம். 

கால் நகங்களை ஒழுங்காக வெட்டி சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் இருக்க, நகங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். 

தினமும் குளிப்பதற்கு முன் வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்து மசாஜ் செய்வது கால்களில் உள்ள தசைகளுக்கு ஓய்வு அளிக்கும். இதனால், கால்களில் ஏற்படும் வலி குறையும். 

இது தவிர, நடப்பது, ஓடுவது போன்ற உடற்பயிற்சிகள் கால்களுக்கு நல்லது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து கால்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். 

இப்படி, கால்களின் அழகை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. மேற்கண்ட வழிமுறைகளை தினமும் பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான, அழகான கால்களை பெறலாம். கால்கள் நம் உடலின் முக்கியமான பாகம் என்பதை நினைவில் கொண்டு, அதற்குத் தகுந்த பராமரிப்பை கட்டாயம் செய்ய வேண்டும்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT