அழகு / ஃபேஷன்

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தக்காளி சாறு!

கலைமதி சிவகுரு

க்காளி சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும். தக்காளியை எதனுடன் சேர்த்து மசாஜ் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

(1)தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும். 

(2)தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.

(3)தக்காளி துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். 

(4) பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது. 

(5) தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும். 

(6) முகச்சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது. 

(7) கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது. 

(8) ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. 

(9) தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.  

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT