நமது பற்கள் வெண்மையாக இருந்தாலே முகம் மளர்ச்சியாக இருக்கும். ஆனால், நாம் உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் பற்களில் கறைகள் படிவதுண்டு. இவற்றில் கடினமான கறைகள் பற்களின் அழகைக் கெடுத்து நம் நம்பிக்கையையும் குறைக்கும். இந்தக் கடினமான கறைகளை எளிதில் நீக்கி பற்களை வெண்மையாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பற்களில் கடினமான கறைகள் ஏன் உண்டாகின்றன?
காபி, தேநீர், ரெட் ஒயின், கருப்பு சோடா போன்ற அடர் நிற பானங்கள் பற்களில் கறைகளை உண்டாக்கும். அதேபோல கருப்பு நிற பழங்கள், சாஸ் போன்ற உணவுகளும் கறைகளை உண்டாக்கும். புகையிலையில் உள்ள நிக்கோட்டின் மற்றும் தார் போன்ற பொருட்கள் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும்.
சில வகை மருந்துகள் பற்களில் கறைகளை உண்டாக்கும் தன்மையுடையதாக இருக்கும். வயதாக வயதாக பற்களின் மேற்பூச்சு தேய்ந்து போவதால் உள்ளே உள்ள மஞ்சள் நிறப் பகுதி வெளிப்பட்டு கரைகள் ஏற்படலாம். பற்களை தினமும் இரண்டு முறை பிரஷ் செய்யாமல் இருப்பது, பல் இழைகள் மற்றும் மவுத்வாஷ் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை கறைகள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்.
கடினமான கரைகளை நீக்கும் வழிகள்:
பற்களில் உள்ள கடினமான கறைகளை நீக்க பல் மருத்துவர் அணுகுவது நல்லது. அவர்கள் சில சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அந்தக் கறைகளை நீக்குவார்கள். இருப்பினும் சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே முயற்சித்து கடினமான கறைகளைக் குறைக்க முடியும்.
தினசரி இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களை மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். பல் துலக்கும் பிரஷ் மற்றும் பேஸ்டை சரியாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பல் எடையைப் பயன்படுத்தி பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குங்கள். இத்துடன் மவுத்வாஷ் பயன்படுத்துவது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைப் பயன்படுத்தி பற்களில் உள்ள கறைகளைக் குறைக்கலாம். ஆனால் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் பற்களின் எனாமல் பாதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பற்களில் ஏற்படும் கடினமான கறைகளைத் தடுப்பதற்கு பழங்கள் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக, புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக கைவிடுவது நல்லது. தினசரி பல் துலக்கி வாய் சுகாதாரத்தை பராமரித்து வந்தாலே பற்களில் கரைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். அவ்வப்போது பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.