Mountains 
பசுமை / சுற்றுச்சூழல்

மலைகள் எப்படி உருவாகி இருக்கும்? அவைகள் இல்லை என்றால் நாமும் இல்லையா?

A.N.ராகுல்

மலை என்றாலே சிலருக்கு ரம்மியமான காட்சியோடு மனதிற்கு ஓர் மகிழ்வான உணர்வு ஏற்படும். அதேபோல், வெகு சிலருக்கு மலையை பார்த்தால் பணமூட்டையாகத் தெரியும். இப்படி பல்வேறு கோணங்களில் பார்க்கப்படும் மலைகள் எப்படி உருவாகியிருக்கும்? மற்றும் அதை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்ட ஆரம்பித்தால் வரப்போகும் விளைவு என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எப்படி உருவாகியிருக்கும்?

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த டெக்டோனிக் தட்டுகளின் (Tectonic Plates) முரண்பாடான இயக்கமே மலைகள் உருவாக்கத்திற்கு முதன்மையான காரணம். டெக்டோனிக் தட்டுகள், பூமிக்கு அடியில் அரை-திரவ நிலையில் இருக்கும் எரி கற்களின் மேலோடுகளில் அடுக்குகளாக காணப்படும். இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று இடைவிடாமல் மோதும் போது நிலப்பகுதியில் ஒரு வித அதிர்வு ஏற்பட்டு, பின் படிப்படியாக நிலப்பரப்புகள் ஒன்று சேர்ந்து, ஒரு செங்குத்தான உருவத்தில் நாம் இப்போது காணும் இமயமலை போன்ற பல மலைகள் உலகம் முழுக்க உருவாகி இருக்கின்றன. இது போன்ற டெக்டோனிக் தட்டு மற்றொரு தட்டின் மீது சில மணித்துளிகள் உரசுவதால் தான் நிலநடுக்கம் போன்றவற்றையும் உணர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த டெக்டானிக் தட்டு ஒன்றோடு ஒன்று மோதும் செயல்முறையை தான் சப் தக்ஷன்(Subduction) என்பர். சில சமயங்களில் மலைகளின் உருவாக்கம் எரிமலை செயல்பாட்டின் மூலமும் நடந்திருக்கின்றன, அதாவது பூமிக்கு அடியில் நிகழும் அதிர்வுகளால் எரிமலையின் உட்புறத்தில் இருந்து வரும் மாக்மா (Magma) எரிகுழம்பு வெடித்து மேற்பரப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டும்போது அதுவே சில நேரங்களில் மலைகளாக உருவாகுகின்றன.

மலைகளின் பயன்பாடுகள்:

சுற்றுச்சூழல் மற்றும் மனித சமுதாயத்தில் மலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பெரும்பாலும் உலகின் "நீர் கோபுரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில், அவைதான் நாம் பருகும் குடிநீர், நம் வாழ்வாதாரத்தை காக்கும் விவசாயம் என்று பல தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கின்றன. இதுபோக, மலைகள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரித்து பல வகையான தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, சில அபூர்வமான மரங்களில் இருந்து வரும் தாதுக்கள்(Minerals) மற்றும் மருத்துவ தாவரங்கள் என்று மலைகள் மனிதகுலத்திற்கு பல வகைகளில் நன்மை அளிக்கின்றன. நம் முதுகெலும்பான விவசாயம், வனவியல்(Forestry) மற்றும் சுற்றுலா போன்றவற்றின் மூலம் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு பெரிதும் பயனளிக்கின்றன. மேலும், மலைகள் நமக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாகவும், ஆன்மீக கலாச்சார ரீதியாகயாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

மலைகளை சேதப்படுத்துவது அல்லது இழப்பதால் வரும் விளைவுகள்:

மலைகளின் அழிவு என்பது அவ்வளவு எளிதில் வெளிவர முடியாத, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். காரணம், மலைகளை சேதப்படுத்துவது எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடங்களை இழக்க வழிவகுக்கும் மற்றும் பல்லுயிர்(Biodiversity) சார்ந்த சுற்றுச்சூழல் சமநிலையை முற்றிலும் சீர்குலைத்து படிப்படியாக அனைத்து உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.

மலைகளின் இழப்பால் நீர் சுழற்சி முற்றிலுமாக பாதிப்படையும். முக்கியமாக மனிதர்களை பொறுத்தவரை, பொருளாதார ரீதியாக கைகொடுக்கும் இயற்கை வளங்களுக்காகவும் சுற்றுலாவிற்காகவும் மலைகளை நம்பியிருக்கும் சமூகங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். பின் கொஞ்சம் கொஞ்சமாக மலைகளின் அளவு நம் கண்முன்னே குறைக்கப்பட்டு, பருவமழை படிப்படியாக தடைபட்டு இயற்கையாக வரும் குடிநீரை எல்லோரும் மறக்க நேரிட்டு, முற்றிலுமாக செயற்கையான குடிநீர் மற்றும் பொருட்களை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஆக, மலைகள் வெறும் புவியியல் வடிவங்கள் அல்ல, அவை நமது பூமியின் ஆரோக்கியத்திற்கும் அதை சார்ந்து வாழும் உயிர்களின் நல்வாழ்விற்கும் இன்றியமையாதவை. மேலும், பல்லுயிர் பெருக்கத்தை கடைப்பிடிப்பதற்கும், நீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கும் 'மலைகளை பாதுகாப்பது' எல்லோர் வாழ்வுக்கும் மிகவும் அவசியமான ஒன்று.

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT