healthy rasam recipes 
உணவு / சமையல்

ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் - கொய்யா சட்னி செய்யலாமா?

நான்சி மலர்

ன்றைக்கு ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் மற்றும் கொய்யா சட்னி ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

நெல்லிக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்.

சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

சின்ன வெங்காயம்-5

நெல்லிக்காய்-1

பூண்டு-5

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

வேக வைக்க,

துவரம் பருப்பு-1 கப்.

நெல்லிக்காய்-2

மஞ்சள் தூள்-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

தாளிக்க,

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

நெல்லிக்காய் ரசம் செய்முறை விளக்கம்.

முதலில் சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 5, நறுக்கிய நெல்லிக்காய் 1, பூண்டு 5, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவும். இத்துடன் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து அதையும் இடித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது துவரம் பருப்பு 1கப், நெல்லிக்காய் 2, மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி விட்டு இத்துடன் இடித்து வைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு 1 கப் தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் தேவையான அளவு சேர்த்து இத்துடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் கொதித்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான நெல்லிக்காய் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கொய்யா சட்னி செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கொய்யாக்காய்-1

கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி.

கருப்பு உளுந்து-1 தேக்கரண்டி.

வெங்காயம்-1

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

புளி-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

தாளிக்க,

எண்ணெய்-1 தேக்ககண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

கொய்யா சட்னி செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, கருப்பு உளுந்து 1 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் 1, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, புளி சிறிதளவு, நறுக்கிய கொய்யாக்காய் 1 சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது தாளிக்க கடாயில்  எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும். சுவையான கொய்யா சட்னி தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT