குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்டை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அதிலும் தேங்காய் பிஸ்கட் என்பது அனைவருடைய ஃபேவரைட்டாகவே இருக்கும். இதை முக்கியமாக டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இன்னைக்கு தேங்காய் பிஸ்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேங்காய் பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்-1/2 கப்.
சக்கரை-1/2கப்.
ஏலக்காய்-3
நெய்-100கிராம்.
மைதா மாவு-1 ½ கப்.
உப்பு-1 சிட்டிகை.
பொடி செய்த முந்திரி தேவையான அளவு.
தேங்காய் பிஸ்கட் செய்முறை விளக்கம்:
முதலில் ஃபேனில் ½ கப் துருவிய தேங்காயை ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியில் ½ கப் சக்கரை அத்துடன் 3 ஏலக்காய் சேர்த்து நன்றாக பவுடர் செய்து கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் 100 கிராம் நெய்யை எடுத்து கொள்ளவும். இத்துடன் பவுடர் செய்து வைத்திருக்கும் சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துவிட்டு வறுத்த தேங்காயை மிக்ஸியில் ஒரே ஒரு சுத்து சுத்திவிட்டு அதையும் இத்துடன் சேர்த்து கொள்ளவும். இத்துடன் 1 ½ கப் மைதா மாவு சேர்த்து இப்போது எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து மாவை தயார் செய்து கொள்ளவும்.
இப்போது அந்த மாவை நன்றாக பரப்பி விட்டு அதன் மீது பொடியாக வைத்திருக்கும் முந்திரியை மற்றும் தேங்காயை தூவவும். ஒருமுறை மாவை பூரி கட்டை வைத்து அழுத்தி விட்டுக் கொள்ளவும். இப்போது ஓரங்களை வெட்டி விட்ட பிறகு அழகாக சதுரமாக பீஸ் போட்டு பேக்கிங் ஃபேனில் வைக்கவும். பிறகு ஓவனை 175°Cல் 10 நிமிடம் பிரீ ஹீட் செய்த பிறகு 12 நிமிடம் உள்ளே வைக்கவும். அவனிலிருந்து பிஸ்கட்டை வெளியே எடுத்து 5 நிமிடம் ஆற விடவும். இப்போது சுவையான தேங்காய் பிஸ்கட் தயார். வீட்டுலேயே செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க.