முருங்கைக்கீரை 
உணவு / சமையல்

இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக்கீரை ரெசிபிகள்!

கல்கி டெஸ்க்

-வசந்தா மாரிமுத்து

முருங்கைக்கீரை சூப்

முருங்கைக்கீரை சூப்

தேவை:

முருங்கைக் கீரை - 1 கப்

சீரகம் , கடுகு - 1/4 ஸ்பூன்

பூண்டுபல் - 5

சின்ன வெங்காயம்-5

பழுத்த தக்காளி - 1

ம-துள்-சிறிது

து.பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2  டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

.மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சுத்தம் செய்த முருங்கைக்கீரையை வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து  தட்டிய பூண்டு போட்டு பின் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியவுடன் அரைத்த முருங்கை கீரை சேர்த்து உப்பு போட்டு வதக்கிய பின் வேக வைத்த து.பருப்பு நீர் ஊற்றி கூட இன்னும் 1 டம்ளர் நீர் ஊற்றி கொதித்த பின்

மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சத்தான சுவையான முருங்கை கீரை  சூப் ரெடி. சாதத்தில்  பிசைந்தும் சாப்பிடலாம். சளி, ஜலதோஷத்திற்கு ஏற்றது.

முருங்கைக் கீரை பொரியல்

முருங்கைக் கீரை பொரியல்

தேவை:

முருங்கைக் கீரை - 1 கப்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - சிறிது

கடுகு - சிறிது

தேங்காய் துருவல் - 1/4 கப்

எண்ணெய் – தாளிக்க

செய்முறை:

ரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய் கிள்ளி தாளிக்கவும்.

வதங்கிய பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் முருங்கைக் கீரை சேர்த்து வதக்கவும்.பின் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து  மூடிநன்கு வேக  விடவும். வெந்த பின் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான கீரை பொரியல் ரெடி.

முருங்கைக் கீரை கடையல்

முருங்கைக் கீரை கடையல்

தேவை:

முருங்கைக் கீரை - 1 கப்

சின்ன வெங்காயம்-6

காய்ந்த மிளகாய் - 5

கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - சிறிது

எண்ணெய், உப்பு - தேவைக்கு

துவரம்பருப்பு - 1/4 கப்

செய்முறை:

டுப்பில் குக்கரில் துவரம்பருப்பு போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். ஒரு மண்சட்டியில்  எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கிள்ளிய மிளகாய் உளுத்தம் பருப்பு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

வதக்கிய பின் சுத்தம் செய்த கீரையை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் வெந்த துவரம்பருப்பு சேர்த்து கலந்து உப்பு போட்டு  வேக விடவும்.

வெந்த பின் இறக்கி கீரை மத்தால் கடைந்து எடுக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட கவையாய் இருக்கும். வைட்டமின் சி சத்து, இரும்புச்சத்து நிறைந்த கீரையை வாரம் ஒரு நாள் சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும்.

ஆவாரம் பூவை ‘ஏழைகளின் தங்கம்’ என்று ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா?

சமூக ஊடகங்களில் பொறுப்பற்றவராக இருப்பது, அதை பயன்படுத்துபவர்களா? பகிர்பவர்களா?

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

SCROLL FOR NEXT