Try making garlic rice like this! 
உணவு / சமையல்

பூண்டு சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

கிரி கணபதி

பொதுவாகவே பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகள் உடலுக்கு நல்லதாகும். அதே நேரம் அஜீரண பிரச்சனை இருந்தால் ஒரு முறை இந்த பதிவில் நான் சொல்வதுபோல பூண்டு சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள். எல்லா பிரச்சனைகளும் நீங்க உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும். பூண்டு சாப்பிடுவதால் இதய நோய்களிலிருந்தும், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பூண்டு - 5

சாதம் - 2 கப்

கொத்தமல்லி - சிறிதளவு

புதினா - சிறிதளவு

நெய் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 3

தக்காளி - 1

வெங்காயம் - 2

கடுகு - 1 ஸ்பூன் 

சீரகம் - ½ ஸ்பூன் 

தனியா தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வானலி வைத்து அது சூடானதும் நெய் ஊற்றி பூண்டு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதை தனியே எடுத்து ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு கடாயில் மீண்டும் கொஞ்சம் நெய் சேர்த்து கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதிலேயே பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளி சேர்த்து நன்கு வேகவைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும். 

பிறகு கொத்தமல்லி, புதினா சேர்த்து வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்க்கவும். இதில் பச்சை வாடை போனதும் சாதத்தை கொட்டி கிளறினால் சுவையான பூண்டு சாதம் தயார்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT