அதிகாலையில் சீக்கிரமாக எழுந்திருந்து படிப்பது. காலை தினமும் நான்கு மணிக்கு எழுந்து படித்தால் சத்தம், சச்சரவுகள் தொடங்குவதற்கு முன்பு அதிக நேரம் கிடைக்கும்.
வீட்டிற்கு அருகில் உள்ள அமைதியான இடத்திற்கு சென்று படிப்பது. உதாரணமாக வீட்டின் அருகில் உள்ள புராதன கோவில், நூலகம், தியான மண்டபம் போன்ற இடங்களில் சென்று படிக்கலாம்.
காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டு படிப்பது. இதன் மூலம் சத்தத்தின் அளவானது குறைந்து படிப்பது இன்னும் எளிதாக இருக்கும்.
வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் படிப்பு சம்பந்தமான எல்லா உபகரணங்களையும் வைத்துக் கொண்டு அங்கேயே தொடர்ந்து படிப்பது. ஒரே இடத்தில் தொடர்ந்து படிப்பதனால் அங்கு சென்று அமர்ந்த உடனேயே படிப்பதற்கான மனநிலை அமைந்துவிடும். இத்தகைய அமைவு படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
சத்தத்தை மட்டுப்படுத்தும் தலைக்கேள் பொறியை (head phones) பயன்படுத்தி படிக்கலாம். அவை வெளி சத்தத்தினை குறைத்து விடும். சத்தமற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்
தியானம் கற்றுக் கொள்வது. மாணவர்கள் தியானம் செய்வதன் மூலம் மனதின் ஓர்மை , சீர்மை, கூர்மை போன்றவை அதிகரிக்கும். சத்தமான இடத்தில் கூட அவர்களால் மனதை ஒருமைப்படுத்தி படிப்பது இலகுவானதாக இருக்கும்.
மாறுபட்டுக் கொண்டே இருக்கும் சத்தத்தை விட, சீரான சத்தம் குறைவான இடைஞ்சல்களை தரும் என்று அறிவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனை வெள்ளை சத்தம் என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் white noise. இதற்கு வெள்ளை சத்தத்தினை வழங்கும் பல்வேறு இணையதளங்கள் உள்ளன. அல்லது அவற்றை பதிவிறக்கி ஒலிபெருக்கியின் மூலம் தங்களுக்கு அருகில் வைத்துக்கொண்டு படிக்கலாம்.
வாய்விட்டு சத்தமாக படிக்கலாம். வாய்விட்டு படிக்கும் போது, வெளி சத்தத்தை தாண்டி குரல் மாணவர்கள் படிக்கும் விஷயத்தினை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள உதவும்.
விரும்பி ஆர்வத்துடன் படிப்பது. எந்த ஒரு விஷயத்தையும் ஊக்கத்துடன் செய்கிறபோது, நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களைத் தாண்டி கவனத்துடனும் ஒருமையுடனும் செய்ய முடியும். இதன் காரணமாகவே சுவாரசியமான புதினத்தை ரயில் நிலையத்தில் கூட நம்மால் முழு கவனத்துடன் படிக்க முடிகிறது. மாணவர்கள் விருப்பத்துடன் படிக்கும்போது சத்தம் தொந்தரவு செய்வது குறைந்து விடும்.
சத்தம் அடங்கும் வேளைகளுடன் நமது படிக்கும் நேரத்தையும் இணைத்துக் கொள்வது. மதிய உணவு நேரம், அதிகாலை நேரம், மாலை நேரம் போன்ற நேரங்களில், எந்த நேரங்களில் சத்தம் குறைவாக இருக்கும் என்று கவனித்து அதற்கு ஏற்றவாறு படிப்பினை திட்டமிடுவது.
ஓரிரு ஜன்னல்களைத் தவிர மற்ற எல்லா ஜன்னல்களையும், கதவுகளையும் சாத்தி விட்டு படிப்பது. இவ்வாறு படிப்பதன் மூலம் வெளி சத்தமானது குறைந்து படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.