ஒருவருடைய பழக்க வழக்கங்கள் அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன. அதிலும் மாலை நேரப் பழக்க வழக்கங்கள் அடுத்த நாளுக்கு தயாராவதற்கான உந்துதலை தருகிறது. அந்த வகையில் வெற்றி பெற்ற நபர்களின் 8 மாலை நேர பழக்க வழக்கங்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. அன்றைய நாளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்: ஒரு கடினமான நாளின் மாலை பொழுதில் அன்று சமாளித்த சவால்களையும் மற்றும் சாதனைகளைப் பற்றியும் யோசித்துப் பார்ப்பதோடு, இது அவரவர் தனிப்பட்ட வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவி செய்தது என்பதை எண்ணிப் பார்ப்பதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய நாளுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
2. நாளைக்கான திட்டம்: அடுத்த நாள் செய்யவேண்டிய செயல்களை முன்னுரிமை அடிப்படையில் மற்றும் யோசனைகளை டைரியில் எழுதி வைத்து அதன்படி பின்பற்றுவதால் அடுத்த நாளுக்கான தெளிவான இலக்கை நிர்ணயித்து செயலாற்றுவதால் எல்லா காரியங்களிலும் வெற்றியை ஈட்டுகிறார்கள்.
3. தொழில்நுட்பத்தில் இருந்து விலகி இருத்தல்: மாலை நேரத்தில் மொபைல் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து விலகி ஆன்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு பதிலாக புத்தகம் வாசித்தல், டைரி எழுதுதல் போன்ற ஆஃப்லைன் செயல்பாடுகளில் நேரத்தை செலவு செய்து அந்த நாளை நிறைவு செய்து மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்கிறார்கள்.
4. வாசித்தல்: வெற்றி பெற்ற நபர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதால் வேலைக்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ இந்த உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவோ, அறிவுத்திறனை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் ஓய்வையும் தரும் நல்ல பழக்கமாக இருக்கிறது.
5. தியானம்: தூங்குவதற்கு முன் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வதால் அன்றைய நாளுக்கான மன அழுத்தத்தை குறைத்து தூங்குவதற்கு தயார் செய்து கொள்கிறார்கள்.
6. தரமான தூக்கத்திற்குத் தயார்ப்படுத்துதல்: குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்லும் பழக்கத்தை எல்லா நாட்களிலும் வழக்கமாக்கி கொள்வதனால் நல்ல ஆழ்ந்த மற்றும் தரமான தூக்கத்தைப் பெறுகிறார்கள்.
7. அன்புக்குரியவர்களோடு நேரத்தை செலவழிப்பது: மாலை நேரங்களில் அவர்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து செலவிடுவதால் அவர்களுடனான பந்தம் வலுப்படுவதோடு, இது அவர்களை மகிழ்ச்சியாக வைத்து வாழ்க்கையில் மன நிறைவான ஒரு உணர்வை கொடுப்பதோடு அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது
8. ஹெவி மீல்ஸ் அல்லது காஃபின் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்: மாலை நேரத்திற்கு பிறகு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதோ, காஃபின் கலந்த பானங்களை குடிப்பதோ, செரிமானத்தை பாதித்து, தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை டின்னருக்கு சாப்பிட்டு, ஹெர்பல் டீ குடித்து நல்ல தூக்கத்தைப் பெறுகிறார்கள்.
மேற்கண்ட எட்டு பழக்க வழக்கங்களை வெற்றி பெற்றவர்கள் பின்பற்றுவதாலேயே தொடர்ந்து அந்த இடத்தை அவர்கள் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.