Home insurance 
வீடு / குடும்பம்

வீட்டுக் காப்பீடு - ஏன், எதற்கு, எப்படி எடுக்க வேண்டும்?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

வீட்டுக் காப்பீடு எடுப்பதென்பது நல்ல விஷயம். அது பொதுவாக நம்மை இரண்டு விஷயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

  1. கட்டடத்தின் கட்டுமானம் (Structure) - இயற்கை சீற்றங்களால் கட்டுமானத்தில் ஏற்படும் பாதிப்புகள்

  2. கட்டடத்தில் உள்ள பொருட்கள் (Contents) - இயற்கை சீற்றங்களால் கட்டடத்தில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

வீடு உள்ள நிலத்திற்கு காப்பீடு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும்.

அடிப்படையான பொது வீட்டுக் காப்பீடு:

பொதுவாக வீடு மற்றும் பிரத்யேக இடர் வீட்டுக் காப்பீடுகளில் (Standard fire and allied perils policy) பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.

  1. தீ விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள்

  2. வெள்ளம், பூகம்பம், இடி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்

  3. மனிதர்களால் ஏற்படும் கலவரம் போன்ற இடர்களால் ஏற்படும் பாதிப்புகள்

  4. விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள்

  5. திருட்டு சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகள்

  6. மின்சாரம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள்

  7. வீட்டின் கண்ணாடி, பீங்கான் சார்ந்த கட்டுமானப் பொருட்களில் ஏற்படும் பாதிப்புகள்

  8. தண்ணீர் கசிவு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள்

மேம்படுத்தப்பட்ட காப்பீடுகள்:

பொது காப்பீட்டிற்கு மேலாக, மேம்படுத்தப்பட்ட காப்பீடுகளையும் (add-on cover) வீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

  1. எடுத்துச் செல்லக் கூடிய மின்னணுவியில் உபகரணங்கள் இழப்புகள் (portable electronic equipments). உதாரணமாக, மடிக்கணினி, புகைப்படக் கருவி

  2. நகைகள் மற்றும் மதிப்பு வாய்ந்த பொருட்கள் இழப்புகள்(Jewellery and valuables). உதாரணமாக, ஓவியங்கள், தங்கநகைகள்

  3. வீட்டினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள்(public liabilities). உதாரணமாக, வீட்டின் சுவர் இடிந்தால், பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள்.

  4. தீவிரவாதம் சார்ந்த இழப்புகள்(Terrorism). உதாரணமாக, தீவிரவாதிகளுடன் ஏற்படும் சண்டையால் வீட்டுக்கு ஏற்படும் இழப்புகள்

  5. வீட்டின் மிதிவண்டி சார்ந்த இழப்புகள் (pedal cycle). உதாரணமாக, வீட்டின் விலையுயர்ந்த மிதிவண்டிக்கான பிரத்யேக காப்பீடு

காப்பீட்டு மதிப்பு வகைகள் எவை? :

இத்தகைய காப்பீடுகளை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம்.

  1. சந்தை விலை காப்பீடு (market value) - இழப்புகளுக்கு சந்தை விலையில் காப்பீடு வழங்கப்படும். உதாரணமாக, கட்டடம் இடிந்தால், கட்டடத்தின் சந்தை விலையில் காப்பீட்டுத் தொகை. இதில், தேய்மானம் கணக்கில் வரும்.

  2. மறுசீரமைத்தல் காப்பீடு (Reinstatement value) - இழப்புகளை மறுபடி புதிய பொருளைக் கொண்டு சீரமைக்க காப்பீடு. உதாரணமாக, கட்டடம் இடிந்தால், மறுபடி கட்டித் தருவதற்கான காப்பீட்டுத் தொகை. இதில் தேய்மானம் கணக்கில் வராது. சந்தை விலை கூடிக் கொண்டே செல்வதால், சந்தை விலை காப்பீடுகள் விலை அதிகம்.

எதனைக் கொண்டு காப்பீடு தொகை முடிவாகிறது? :

  1. வீட்டின் இடமமைவு (Location) - இயற்கை சீற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் காப்பீட்டுத் தொகை அதிகம்.

  2. வீட்டின் அளவு (Size): வீட்டின் அளவு கூடக் கூட, காப்பீட்டுத் தொகை அதிகம்.

  3. வீட்டின் கட்டட முறை, கட்டப் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் (construction design and used materials) - வீடு கட்ட விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் காப்பீட்டுத் தொகை அதிகம்.

  4. வீட்டிலுள்ள பொருட்களின் மதிப்பு (value of contents) - வீட்டில் மதிப்புள்ள பொருட்கள் கூடக் கூட காப்பீடு அதிகரிக்கும்.

  5. வீட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள் (security measures) - புகை அபாயசங்கு போன்றவை இருந்தால், காப்பீட்டுத் தொகை குறையும்.

வீட்டுக் காப்பீடு எடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? :

  1. எது காப்பீட்டில் வரும், எது வராது என்பவை திட்டத்திற்கு திட்டம் மாறுபடும்.

  2. வீட்டில் புகை அபாய சங்கு, திருட்டு அபாய சங்கு போன்ற அம்சங்கள் இருப்பின் காப்பீட்டுத் தொகை குறைவு.

  3. காப்பீடுத் தொகை இணையத்தில் குறைவு

  4. சொந்த வீடு அல்லது வாடகை வீட்டிற்கும் எடுத்துக் கொள்ளலாம்

  5. கட்டடம் மட்டுமா கட்டடத்தில் உள்ள பொருட்களுக்குமா, மேலதிக காப்பீடுகள் எவை என்பவை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறு வீட்டுக் காப்பீடு கோருவது? :

  1. வீட்டில் ஏதேனும் விபத்துகள், திருட்டு சார்ந்த இழப்புகள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு நிறுவனம் மற்றும் காவல் துறையை அணுக வேண்டும்.

  2. காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, காப்பீடு கோர வேண்டும். மதிப்பீட்டாளர் வரும்போது, அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.

வீட்டுக் காப்பீட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் தவணைத் தொகை குறைவு. கிடைக்கும் மனநிம்மதி அதிகம்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT