வீடு / குடும்பம்

யாரெல்லாம் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது தெரியுமா?

விஜி

‘லேடிஸ் பிங்கர்’ என்று அழைக்கப்படும் வெண்டைக்காயில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உண்டு.

வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாவதோடு, ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து, உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம். இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

இப்படிப் பல நன்மைகள் வெண்டைக்காயில் இருந்தாலும் கூட எதையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது எனக் கூறுவார்கள். வெண்டைக்காய்தானே என அதை அதிகமாக சாப்பிடக்கூடாது அதனால் பல பிரச்னைகள் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோய்கள் உள்ளவர்கள் வெண்டைக்காய் உணவை தவிர்ப்பது நலம்.

சிறுநீரக நோய்கள்: உங்களுக்கு சிறுநீரக நோய்கள் இருக்கிறது என்றால், வெண்டைக்காயை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பித்தப்பை கல் உருவாக வெண்டைக்காய் ஒரு காரணமாக அமையலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்: வெண்டைக்காயை குழம்பில் போடுவதென்றாலும், பொறிப்பது என்றாலும் வெண்டைக்காயை வேக வைக்கவும், அதந் பிசுபிசுப்பு நீங்கவும் சாதாரண அளவை விட அதிக எண்ணெய் ஊற்றுகிறோம். இதனால் வெண்டைக்காய் இழுத்துக் கொள்ளும் அதிக அளவு எண்ணெயால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

சைனஸ்: உங்களுக்கு இருமல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால் நீங்களும் வெண்டைக்காயைத் தவிர்ப்பது நல்லது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT