AC Outdoor Unit 
வீடு / குடும்பம்

நம் ஏசியில் பயன்படுத்தப்படும் Outdoor யூனிட்டின் பயன் என்ன?

A.N.ராகுல்

மாறி வரும் பருவநிலை மாற்றங்களால் இன்றைய காலகட்டத்தில் ஏசிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பல வீடுகளில் அதிக நேரம் உபயோகிக்கப்படுவதால் குறுகிய காலத்திலே பல பிரச்னைகளைத் தருகிறது, பல சமயங்களில் குளிர் காற்று வாராத போது அதை நாமே சுத்தம் செய்து உபயோகித்துகொள்கிறோம். ஆனால், அது எல்லா நேரங்களிலும் கைகொடுக்காது. சில நேரங்களில் நம் வீட்டின் வெளியே வைக்கப்படும் அவுட்டோர் யூனிடாலும் (Outdoor Unit) பல பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். அப்படி என்ன முக்கியத்துவங்கள் அதில் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஏசிகளின் செயல்பாட்டில் வெளிப்புற பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது உட்புறச் சூழலில் இருந்து வெளியே வெப்பத்தை வெளியேற்றுகிறது. அப்படி என்னென்ன கருவிகள் அல்லது பொருட்கள் இந்த outdoor யூனிடில் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

  • இதில் இருக்கும் Compressor குளிரூட்டியை (Refrigerant gas) உள்ளே செலுத்துகிறது மற்றும் அதற்கு தேவையான அழுத்தத்தை அதிகரிக்கிறது. குறைந்த அழுத்த வாயுவிலிருந்து உயர் அழுத்த வாயுவாக மாற்றுகிறது(Low pressure gas to high pressure gas). இந்த செயல்முறைதான் நம் அறையை குளிர்விக்க தேவைப்படும் குளிர்வான வாயுவை (cooling gas) தருகிறது. அதைத்தான் நாம் குளிர்ந்த காற்றாக அனுபவிக்கிறோம்.

  • கன்டென்சர் காயில் (condenser coil) மூலம்தான் குளிர்வான வாயு செலுத்தப்பட்டு மீண்டும் அதுதான் உள்ளே இருக்கும் சூடான வெப்பத்தை வெளிப்புற காற்றில் வெளியிடவும் உதவுகிறது. இதுதான் நீராக வெளியே சொட்டுகிறது.

  • கன்டென்சர் காயிலால்( condenser coil)வெளியே எடுத்து வரப்படும் வெப்பம், அவுட்டோரில் இருக்கும் விசிறியால்(Fan) விரட்டப்பட்டு, மீண்டும் குளிர்வான வாயுவை கன்டென்சர் காயில் மூலம் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கிறது.

அவுட்டோர் இல்லாமல் வேலை செய்யும் சில வகையான ஏர் கண்டிஷனர்களும் இருக்கின்றன. இவை கையடக்க ஏசியாகவும்(Portable air conditioners) மற்றும் ductless mini-split systems என்ற வகைகளில் இருக்கின்றன.

கையடக்க ஏசிகள் ஒரு அறையிலிருந்து வேறொரு அறைக்கு நகர்த்தலாம். குளிர்ச்சி மற்றும் வெப்ப வெளியேற்றம் ஆகிய இரண்டையும் செய்ய பொதுவான ஒரு யூனிட்டாக இதைப் பயன்படுத்தலாம்.

டக்ட்லெஸ் மினி-ஸ்பிளிட் சிஸ்டம்கள்(ductless mini-split systems): அறையை குளிர வைப்பதற்கு என தனி இண்டோர் யூனிட்டும் மற்றும் சுவரில் அல்லது ஜன்னலில் பொருத்திக்கொள்வதுமாக சிறிய அவுட்டோர் யூனிட்டும் இருக்கும். இதை நம் தேவைக்கு ஏற்றவாறு அடிக்கடி மாற்றிக் கொள்ளவும் முடியும்.

இந்த விஷயங்களை தெரிந்துகொள்வதன் மூலம் நாம் பயன்படுத்தும் ஏசிகளில் சில பழுதுகளை நாம் உணர்த்தாலும், அது எதனால் ஏற்படுகிறது என்ற புரிதலை நாம் பெறலாம். இதனால் மிகப்பெரிய பழுதுகளையும், முன்கூட்டியே அறிந்து ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்துவிடலாம்.

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

SCROLL FOR NEXT