சிலர் சாதாரணமாக மக்களோடு மக்களாக இருப்பார்கள். திடீரென்று பார்த்தால் பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி பணக்காரர்களாகவேயிருக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இதெல்லாம் வெறும் அதிர்ஷ்டம் என்று சொல்லி நகர்ந்து விட முடியாது.
நீங்களும் பணக்காரராக வேண்டும், வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என்று நினைத்தால் இந்த 10 விதிமுறைகளை கடைப்பிடியுங்கள்.
உங்களுக்கென்று ஒரு புது ஐடியாவை வைத்துக் கொள்ளுங்கள். புதுமையான ஐடியாக்களுக்கு மக்களிடம் என்றுமே வரவேற்பு உண்டு.
குறிக்கோளை அடைய எது தடையாக இருந்தாலும் உடைத்து எறிந்து விட்டு போய் கொண்டேயிருக்க வேண்டும். அந்த இடத்தில் கவனச்சிதறல் கண்டிப்பாக இருக்க கூடாது.
கீழே விழுந்தால் கண்டிப்பாக எழுந்திருக்க தெரிந்திருக்க வேண்டும். போராடும் போது ஆயிரம் முறை விழுந்து எழுந்திரிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
புதிதாக ஒரு விஷயம் செய்யும்போது ஆயிரம் கேலி கிண்டல்கள் வரும். அது எதுவும் நம்மை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய யோசனையை மற்றவர்களிடம் சொல்வதை தவிர்க்க வேண்டும். நாம் அதில் வெற்றி பெறும் வரை யாரிடமும் ரகசியத்தை வெளியிட கூடாது.
வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். பணக்காரராக ஆவது பெரிதில்லை, பணக்காரராக நிலைக்க வேண்டுமெனில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களிடம் இருப்பது எல்லாவற்றையும் இழந்து மறுபடியும் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் கலங்காமல், “என்னால் முடியும்” என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
பணத்தை தேக்கி வைத்திருக்க கூடாது. பணத்தை பெருக்க கூடிய ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது சிறந்தது.
வெற்றி உடனே வரவேண்டும் என்று அவசரப்படக் கூடாது. வெற்றி என்பது பொறுமையாகவும், படிப்படியாகவும் தான் கிடைக்கும். ஒரே பாட்டில் வெற்றி பெறுவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமாகும்.
காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற மாற்றம் வேண்டும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கையில், பழைய யோசனைகளையே வைத்துக்கொண்டு தாக்குப்பிடிக்க முடியாது.
இந்த பத்து கட்டளைகளையும் வாழ்வில் கடைப்பிடித்து பாருங்கள். நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்.