5 risks men must take in their lives 
Motivation

ஆண்களே இந்த 5 ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் கிடைக்கும்! 

கிரி கணபதி

ஒவ்வொரு ஆணும் தங்கள் வாழ்நாளில் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். இதில் சில முடிவுகள் பாதுகாப்பானதாகவும் சில முடிவுகள் ரிஸ்க்கானதாகவும் இருக்கும். இந்த ரிஸ்குகள் எடுப்பது என்பது வெற்றியை நோக்கிய பயணத்தில் மிகவும் முக்கியமானது. ஆனால், எந்தெந்த ரிஸ்க்களை எடுக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். இந்தப் பதிவில் ஆண்கள் தங்கள் வாழ்நாளில் எடுக்க வேண்டிய 5 முக்கியமான ரிஸ்குகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

  1. புதிய தொழிலைத் தேர்ந்தெடுப்பது: ஒரு நிலையான வேலையை விட்டுவிட்டு புதிய தொழிலைத் தேர்ந்தெடுப்பது பெரிய ரிஸ்க்காகத் தோன்றலாம். ஆனால், இது நீண்ட காலத்தில் பெரிய வெற்றியை தரக்கூடும். புதிய தொழில்துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும். இது உங்களுக்கு புதிய திறமைகளை கற்றுக்கொள்ளவும் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும் உதவும். 

  2. புதிய இடத்திற்கு குடிபெயர்வது: புது இடத்திற்கு குடி பெயர்வது என்பது தொடக்கத்தில் பல சவால்களைக் கொடுக்கும். ஆனால், இது உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவங்களைத் தரும். புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள உதவும். உலகம் பற்றிய உங்கள் பார்வையை விரிவுபடுத்தும். 

  3. நல்ல உறவு: ஒரு நல்ல உறவில் முதலீடு செய்வது என்பது நேரம், உணர்ச்சி, சில சமயங்களில் பணம் போன்றவற்றை முதலீடு செய்வதாகும். இது பெரிய ரிஸ்காகத் தோன்றினாலும், உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒரு ஆழமான அர்த்தமுள்ள உறவு உங்கள் வாழ்க்கையில் நிறைவைத் தரும். 

  4. புதிய திறமைகளைக் கற்றுக் கொள்வது: புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது என்பது உங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். மேலும், இதனால் உங்களுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும். 

  5. கல்வியைத் தொடர்வது: ஆண்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் கட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதற்கு செலவிடும் நேரம் மற்றும் பணமானது உங்களது திறமையை வளர்த்து, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும். இதன் மூலமாக உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

இப்படி பல ரிஸ்க்களை ஆண்கள் தங்களது வாழ்வில் எடுக்க வேண்டி இருக்கும். மேலே, குறிப்பிட்ட சில முக்கியமான ரிஸ்குகளை ஒவ்வொரு ஆணும் தங்களின் வாழ்வில் எடுக்க வேண்டும். இந்த ரிஸ்குகளை எடுப்பதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடையலாம். 

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT