ஆனந்த் மஹிந்திரா 
Motivation

அனுபவத்தால் கிடைக்கும் அறிவே சிறந்தது!

ஆர்.ஜெயலட்சுமி

செயற்கை நுண்ணறிவு துணையாக மட்டுமே இருக்கும் எனவும் அனுபவத்தால் கிடைக்கும் மனித அறிவை மட்டுமே தான் நம்புவதாகவும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

மனித அறிவை மட்டுமே நம்புபவன் நான். நமது அனுபவத்தால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். நம்முடைய அனுபவத்தால் கிடைக்கும் அறிவை பயன்படுத்தினால் நம்முடைய செயல்பாடுகள் பேச்சில் மிகுந்த வித்தியாசம் தெரியும். செயற்கை நுண்ணறிவு குறித்து பலரும் பேசி வருகிறார்கள். அது தரவுகளை சேகரிக்கும் மிகப்பெரிய அமைப்பாக கூறுகிறார்கள்.

உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உங்களுக்கான கதை. எனவே நாம்தான் நமது கதைகளை எழுதுகிறோம். எழுத்து என்பது சிந்தனைகளை படம் பிடிப்பதுடன் அறிவு சார்ந்த கருத்துக்களை பரப்புவதுடன் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும் உதவுகிறது. எழுத்து என்பது உலகத்தை மாற்றும் செயற்கை நுண்ணறிவு. நம்முடைய கற்பனை ஊற்றுகளுக்கு துணையாக இருக்குமே தவிர அதுவே முழுமையானது இல்லை இவ்வாறு அந்த தொழிலதிபர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதும் உண்மைதானே! அனுபவத்தால் கிடைக்கும் அறிவுதான் என்றுமே நமக்கு துணை இருக்கும். அந்த அனுபவம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நம்மால் வெற்றி பெற முடியும் வரை முடியும் போது இதுதான் நமக்கு வாழ்க்கையில் தந்த அனுபவம் பாடம் என உணர முடியும். நம் அனுபவமே நமது சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.

இதற்கு இந்த சம்பவம் கூட ஒரு உதாரணமாக பார்க்கலாம்.

எமிலி ஸோல சிறந்த பிரஞ்சு எழுத்தாளர். எளிய குடும்பத்தில் பிறந்து ஏழ்மையில் வருந்தியவர். இவருக்கு தம் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு தம் எழுத்தை கொண்டே நடத்த வேண்டியிருந்தது. ஆகவே நாள் முழுவதும் தளராது எழுதிக் கொண்டிருந்தார். இவரது படைப்புகளில் நீதியும் நாட்டின் சிறப்பும் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

ஒருநாள் இவரது குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் இருந்தது. இவரது மனைவி இவரை புத்தகக் கம்பெனி யாரிடம் இருந்து கொஞ்சம் பணம் வாங்கி வர வலியுறுத்திக் கொண்டிருந்தார். தாம் பிரசுரம் செய்ய கொடுத்த புத்தகத்துக்கு புத்தக கம்பெனியார் பணம் தருவாரோ என்ற ஐயம் அவருக்கு. எனினும் மனைவியின் வற்புறுத்தலை பொறுக்க இயலாத இவர் கம்பெனி நோக்கி நடக்கலானார். அப்போது நல்ல மழையும் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. கிழிந்த குடை ஒன்றைபிடித்துக் கொண்டு இயற்கையுடன் போராடியவாறு ஸோலா புத்தக கம்பெனியை சென்றடைந்தார்.

எமிலி ஸோல பிரெஞ்சு எழுத்தாளர்.

அங்கு தமது புத்தகங்கள் பரபரப்புடன் விற்று கொண்டிருப்பதை ஸோலா கண்டார். ஆனால் அவர் அங்கே வந்து கொண்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. தமது கம்பெனிக்கு ஸோலா வந்திருப்பதை மிகுந்த நேரத்துக்குப் பிறகு கண்டார் முதலாளி. அவரை இனிய முகத்தோடு வரவேற்றுக் கொண்டார். ஸோலா தயங்கியபடியே கம்பனி முதலாளியிடம் ஐயா உங்களால் கொஞ்சம் பணம் தர முடியுமா? என்று கேட்டார்.

முதலாளி பற்களெல்லாம் தெரிய சிரிக்கலானார். அவர் தனது மனைவியை அழைத்து ஸோலா வந்திருக்கிறார் அவருக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று தெரிவித்தார்.

இம்மொழிகளைக் கேட்ட ஸோலாவின் முகத்தில் ஏமாற்றம் பரவியது. பணம் கிடைக்காதோ என்ற ஐயம் அவருக்கு.

அதேநேரம் முதலாளி ஒரு கவரை எடுத்து ஸோலா இதை உங்களுக்கு அனுப்பவே இருந்தேன் நீங்கள் வந்து வட்டீர்கள் கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி அதை கொடுத்தார்.

என்னமோ ஏதோ என்று வியப்புடன் ஸோலா அந்த கவரை வாங்கி பிரித்துப் பார்த்தார் அதனுள் 18000 பிராங்க் பணத்திற்குரிய செக் ஒன்றிருந்தது. இன்பக் கடலில் திளைத்தார் ஸோலா. செக்கை மாற்றி பணம் வருவது வரை குடும்பம் பட்டினியால் வாடி விடுமே என்ற நினைவுச் ஸோலாவிடம் எழுந்தது.

நன்றி கூறிவிட்டு ஏதேனும் சில்லறை பணம் இருந்தால் கொஞ்சம் கொடுங்கள் எனக்கேட்டார் .

தமது பையில் இருந்து பணத்தை எல்லாம் சேர்த்துக் கொடுத்தார் முதலாளி. ஸோலா  முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியை என்னவென்று கூறுவது. காகிதத்தில் இருந்த பணத்தைவிட கையில் ரொக்கமாக இருந்ததே அவருக்கு அப்போது மதிப்புடையதாக இருந்தது. அதைக் கொண்டு அன்றைய செலவை நடத்தி விடலாம் அல்லவா! இதுவும் ஒரு அனுபவ பாடம் தான்...

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT