co ordination. Image credit- pixabay
Motivation

மக்களுடன் இணைந்து செயல்படுவது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்!

இந்திரா கோபாலன்

க்களுடன் இணைந்து செயல்படுவது வாடிக்கையாகும் போது, நீங்கள் தனிமைபடுத்தப்படமாட்டீர்கள். மற்றவருடன் பழகும்போது பல தரப்பட்ட எண்ணங்கள், செயல்முறைகள் உங்கள் பார்வைக்கு வரும். வாழ்க்கையை பலதரப்பட்ட கண்ணோட்டத்தோடு பார்ப்பீர்கள். வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளைப் பாராட்டப் பழகுப்போது வாழ்க்கை இனிக்கத் துவங்கும்.  மிக வேகமாக மாறிக்கொண்டு வரும் வாழ்வில் பெரிய நிகழ்வுகள்  ஏற்படுவதற்கு காத்திருத்தல்  ஏமாற்றத்தை தரலாம்.

எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் வாழ மறந்து விடக்கூடாது. நமக்கு ஏற்றம் தரும், குதூகலம் படுத்தும் சிறு சிறு நிகழ்வுகள் மெச்சப்பட வேண்டும்.  அதற்குக் காரணமானவர்கள் நம்முடனேயே  இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து அவர்களை அரவணைத்து வாழ்க்கையை முன் கொண்டு செல்லும்போது  மற்றவர்களிடத்தில்  நம் தாக்கம் அதிகமாகிறது.  வாழ்க்கையின் அழகு பலமடங்காகிறது. 

நிச்சயமாக உங்கள் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்கும் நீங்கள்தான் போராளியாக வேண்டும். யாரும் அவற்றை உங்களுக்குப் பரிசாகத் தர முடியாது.  ஆனால் உங்கள் வெற்றி யாரும் இல்லாத வெற்றிடத்தில் ஏற்படுவதில்லை. வெற்றிபெற பலரின் பங்களிப்பு தேவை. அந்தக் குழுவினர்களுடன், நண்பர்களுடன், குடும்பத்தார்களுடன்  இணைந்து செயல்படும்போது நற்பண்பை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர்களின் பங்களிப்பை தரும்  பொருட்டு, அவர்களின்  வெற்றியிலும் உங்கள் பங்களிப்பு அதிகரிக்கட்டும்.

மக்களுடன் கலந்து செயலாற்றும்போது பொறுமை கூடவே வரும். அவர்களுக்குத் தேவையான இடைவெளி, நேரம், ஆதரவு  முதலியவற்றைத் தரவேண்டும். அவர்கள் பேசுவதை கவனமுடன் கேட்கும் கலையில் திறம்பட இருத்தல் வேண்டும். மற்றவர்கள் தரும் ஒரு சிறிய கருத்து அல்லது யோசனையே உங்களை வெற்றியாளராக்கிவிடும். அந்த யோசனை வரும்போது காதுகளை மூடி விடாதீர்கள். இந்த மக்கள் சக்தி உங்களுடன் இருக்கும்போது உங்கள் துணிவும் அதிகமாவதை உணர்வீர்கள்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

SCROLL FOR NEXT