இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதுமிருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக வருகை தருகிறார்கள். இந்த அமர்நாத் சிவலிங்கத்தைப் போலவே, உலகம் முழுவதும் இருந்து மக்கள் தரிசிக்க வருகை தரும் மற்றொரு சிவலிங்கம் ஆஸ்திரிய நாட்டின் சால்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள வெர்ஃபெனில் 40 கி.மீ. நீளமுள்ள பனிக் குகை அமைந்துள்ளது.
இது இயற்கையான சிவலிங்கத்தை போன்றே காட்சி தருகிறது. அது மட்டுமின்றி, அமர்நாத் சிவலிங்கத்தை விட, பல மடங்கு பெரியது இந்த சிவலிங்கம். இந்தப் பனிக்குகை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குப் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பனிப் படிக்கட்டுகளின் மூலம் சென்று இந்த, சிவ லிங்கத்தை தரிசிக்கலாம். இந்த 'சிவ்லிங்கின்' உயரம் சுமார் 75 அடியாகும். இந்தப் பனிப் பாதைக் குகை மிகவும் பயணிப்பதற்கு மிகவும் ஆபத்தானதாகும்.
உலகின் மிக நீளமான இந்தப் பனிக்குகை 1879ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குகையிலேயே மற்றும் சில சிவலிங்கங்கள் போன்ற பல வடிவங்களையும் காணலாம். இந்தப் பனிக்குகை வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை திறந்திருக்கும். இந்தப் பனிக்குகையில் நுழையும்போது, நீங்கள் வித்தியாசமான மற்றும் புதிய உலகில் நுழைவதைப் போன்று உணர்வது நிச்சயம்.