கோயில்கள் நகரம் காஞ்சிபுரம். 
பயணம்

கோயில் நகரமாம் காஞ்சிபுரம்!

இந்திராணி தங்கவேல்

கில உலக அளவில் கோயில்கள் நகரம் என்ற புகழைப் பெற்ற காஞ்சிபுரம் சென்னைக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயில் ஸ்ரீ 'காமகோடி பீடம்' எனவும் ,காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. முக்தி தரும் தலங்களுள் 7 னுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்களின் புகழ்மிக்க தலைநகராக விளங்கியது. 

கோயில்கள் நிறைந்த பொன்னகர்:

ச்சபேஸ்வரர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், திருப்பராந்தகேஸ்வரர் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், பச்சை வண்ண கோவில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வைகுந்த பெருமாள் கோவில், (பரமேஸ்வர விண்ணகம்) வரதராஜ பெருமாள் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில், முத்தேஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில் ஆகியன காஞ்சி கோயில் நகரம் என்பதை மெய்ப்பிக்கின்றன.

உலகளந்த பெருமாள்

இவை யாவும் கட்டடக்கலை சிறப்பும்,  சிற்பக்கலை பெருமையும் கொண்டவை.

அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் தன்னை வழிபடுபவரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் அஷி (கண்கள்) களையுடையவள் இவள். தவிர விருப்பங்களின் (காமம்) எல்லை (கோடி) யாகிய வீடு பேற்றை தருபவர் இவள். ஆகவே காமகோடி காமாட்சி என்று அழைக்கப் படுகிறாள். சிவனால் சபிக்கப்பட்ட மன்மதனை அடக்கி ஆட்கொண்டதும் ஸ்ரீ காமாட்சியே. குரோத உணர்வு கொண்ட பந்தாகரனை கொன்று காம குணம் கொண்ட மன்மதனை அடக்கி ஒவ்வொருவனும் குரோதத்தை ஒழித்து காமத்தை அடக்கி வீடு பேற்றை அடைய வேண்டும் என ஆட்சி செலுத்துபவர் ஸ்ரீ காமாட்சி என புராண வரலாறு கூறுகிறது. அறம் வளர்த்த நாயகி என போற்றப்படும் காமாட்சி அம்மனை ஆதிசங்கரர் இந்த ஊரில் பிரதிஷ்டை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

காமகோடி பீடம்:

து ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது .தனது 32 வது வயதில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு அருள் பெற்றார். இவர் தவறான வழிகாட்டக் கூடியவற்றை விலக்கி விநாயகர், முருகன், சிவன், அம்பாள் ,விஷ்ணு, சூரியன் ஆகியோர் மூலம் உண்மையான அத்வைத வேத சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். அதை செயல்படுத்த நாட்டில் பல இடங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்றுதான் காமகோடி பீடம். 

காமகோடி பீடம்

ஏகாம்பரநாதர் திருக்கோயில்:

து காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய கோயில் ஆகும். பஞ்சபூத தலங்களில் காஞ்சிபுரம் ஒன்று. இங்கு இறைவன் பூமியாக போற்றப்படுகிறார் .இக்கோயிலின் ராஜகோபுரம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியது. கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. இங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் உட்பிரகார தூண்கள் ஆகியன கலையழகு மிக்கவை. 18 சிறிய லிங்கங்கள் உருவங்களைக் கொண்டுள்ள மாபெரும் லிங்கம் இக்கோயிலின் கலைச் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. 

கைலாசநாதர் கோயில்:

க்கோயில் காலத்தால் தொன்மை வாய்ந்தது. ராஜ சிம்மேசுவரம் எனவும் பெரிய திருக்கற்றளி எனவும் சிறப்பிக்க பெறும் அதிஷ்டானம் முதல் உச்சி வரை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன .எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. 

வைகுந்த பெருமாள் திருக்கோயில்:

த்தலம் கைலாசநாதர் கோயிலுக்கு நேர் கிழக்கில் உள்ளது. இதுவும் பல்லவர்களால் எழுப்பப்பட்ட வைணவ திருத்தலங்களில் ஒன்று. இங்கு பெருமாள் அமர்ந்த கோலம், நின்ற கோலம் ,சாய்ந்த கோலம் ஆகிய மூன்று திருக்கோலங்களில் காட்சி தருகிறார் .இத்திருக்கோவில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் எழுப்பியது என கூறப்படுகிறது.

காஞ்சி வரதராஜ பெருமாள்

காஞ்சி வரதராஜ பெருமாள்:

க்கோயில் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ளது ,.108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 

உத்தர மேரூர்:

த்தரமேரூர் என்றாலே நாம் நினைவுக்கு வருவது கல்வெட்டுகள்தான். நம் நாட்டில் கோயில் நகரம் தலைசிறந்து விளங்கும் உத்திரமேரூர் சென்னையிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய நகரங்களில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

சித்ரகுப்த சுவாமி கோயில்:

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. 

காஞ்சியில் அருள் பாலிக்கும் சித்ரகுப்தருக்கு உற்சவமூர்த்தி உண்டு. உடன் உறைபவர் கர்ணிகையம்மன். சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீ கர்ணிகை அம்பாள் சமேத ஸ்ரீ சித்திரகுப்தர் காஞ்சியின் நான்கு மாடவீதிகளிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் மூலவர் இடது கையில் ஓலைச்சுவடிகளையும் வலது கையில் எழுத்தாணி களையும் கொண்டபடி ஒரு காலை தொங்க விட்டுக் கொண்டும் மறுகாலை மடித்துக்கொண்டும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரின் வலது தோளுக்கு சற்று மேலே உள்ள பகுதியில் ஒரு நாகம் இருக்கிறது. கேது கிரகத்தின் அதிபதி இவர் என்பதால் கேதுவின் அம்சமாக இந்த நாகம் காணப்படுகிறது. கேதுவால் ஏற்பட்ட பிரதோஷங்கள் நீங்க மக்கள் இங்கு பிரார்த்திக் கிறார்கள். 

தென்னாங்கூர்

தென்னாங்கூர்:

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் 37 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பிரதான கோபுரம் வடக்கே உள்ள பூரி ஜெகநாதர் கோபுர வடிவிலும், ராஜகோபுரம் தென்னாட்டு முறையிலும் கட்டப்பட்டுள்ளன. சுவாமி ஞானானந்தகிரி பீடம் சார்பில் பூரி ஜகந்நாதர் கோயில் வடிவில் 120 அடி உயர பிரதான கோபுரத்துடன் உள்ளது. 

ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் காஞ்சிபுரத்தை தேர்வு செய்து சுற்றி வரலாம். அவ்வளவு கோயில்கள் நகரைச் சுற்றிலும்  சிறியதும், பெரியதுமாக இருக்கின்றன.

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

SCROLL FOR NEXT