Tamil New Year Krodhi Year Benefits https://tamil.oneindia.com
தீபம்

தமிழ் புத்தாண்டு குரோதி வருடப் பலன்கள்! கணிப்பு: ‘ஜோதிடத் திலகம்’ வேதா கோபாலன்

கல்கி டெஸ்க்
Vedha Gopalan

ல்கி இணையதளம் வாசகர்களுக்கு, இனிய குரோதி வருட வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளை விட, இந்த ஆண்டு நம் எல்லோருக்குமே மேன்மையாக இருக்கப்போகிறது. மே மாதம் ஒன்றாம் தேதி மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு குரு பகவான் மாறவிருக்கிறார். மற்றபடி மீனத்தில் உள்ள ராகுவும், கன்னியில் உள்ள கேதுவும், கும்பத்தில் உள்ள சனியும் ஆண்டு முழுவதும் இதே ராசிகளில்தான் இருக்கப் போகிறார்கள். குரு பகவான் மட்டும் அக்டோபர் 15 முதல் பிப்ரவரி 11 வரை வக்ரகதியில் (அதாவது எதிர்த்திசையில் திரும்பிப்) பயணிக்கிறார். சனியும் சில மாதங்களுக்கு வக்ரமாகப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் என்பதைப் பார்க்குமுன் ஒருசில வார்த்தைகள்...

குரோதி என்றால் குரோதமான என்றும் கெடுபலன்கள் அதிகம் என்றும் ஒருசாரார் வதந்தி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டின் கிரக நிலைகள் அப்படி ஒன்றும் பயங்கரமாக இல்லை. அதிலும் குரு பகவான் கெடுபலன்கள் அளிக்க மாட்டார். அவர் முழு சுப கிரகம். என்னதான் எதிரியாகிய / அசுர குருவாகிய சுக்ரனின் வீட்டில் இருந்தாலும் சூரியன், சந்திரன், செவ்வாய் என்ற சாரங்களில் அருமையாக நகரவிருப்பதாலும் சனி பகவான் தனது வீட்டிலேயே இருக்கிறார் என்பதாலும் நற்பலன்கள் அனைவருக்குமே அதிகம்தான். சரி, இனி பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

மேஷம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருவும், பன்னிரண்டில் ராகுவும், ஆறில் கேதுவும் பதினொன்றாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். குடும்ப விவகாரங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்தேறும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் கட்டும் பாக்கியம் கிடைக்கும். இரண்டு மூன்று வழிகளிலும் இன்கம் வரும். எனவே, செலவு பற்றிய பயம் இருக்காது. முன் எப்போதோ கொடுத்து மறந்துபோயிருந்த கடன் வசூலாகும். நீங்க எந்த வகையிலும் எதிர்பார்க்காமல் இருந்த தொகைகள் வந்து சேரும்.

ரிஷபம்: இந்த ஆண்டு உங்கள் ராசியின் மீது குருவும், லாப ஸ்தானத்தில் ராகுவும், ஐந்தில் கேதுவும் பத்தாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்கள் செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். அதுல ஓரளவு இன்வெஸ்ட்மென்ட் செய்ய இது உகந்த ஆண்டு. நல்ல லாபம் வரும். ஆனால், பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து எதையும் செய்துடாதீங்க. வருமானங்களும் லாபங்களும் சற்றே நிதானப்போக்கில்தான் வரும். உங்களின் கவர்ச்சி அம்சம் காரணமாக நிறைய நன்மைகள் உங்களைத் தேடி வரப்போகின்றன.

lord siva

மிதுனம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் குருவும், பத்தில் ராகுவும், நாலில் கேதுவும், ஒன்பதாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். நீங்க மாணவரா? நல்லது. அப்படின்னா தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்கா படிப்பீங்க. லட்டு மாதிரி மார்க் கிடைக்கும். மேடை ஏறிப் பரிசு வாங்கி, பள்ளி, கல்லூரியில், ஏன் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறவும் வாய்ப்பு இருக்குங்க. கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைகள் டாட்டா சொல்லிட்டுக் காணாமல் போயிடுங்க. ஃபாரின் வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே, அனேகமாக் கிடைச்சாச்சுன்னு நினைச்சுக்குங்க. கவலை வேணாம். சக்ஸஸ்தான். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நடைபெறும்.

கடகம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் குருவும், ஒன்பதில் ராகுவும், மூன்றில் கேதுவும், எட்டாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். உங்க வீட்டில் யாருக்கோ பாப்பா பிறக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும்.  நல்லதே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு டிஸைட் பண்ணி சீக்கிரம் ஸ்டார்ட் செய்ங்கப்பா. நீங்க புத்திசாலிகள் என்பதால் பிரச்னைக்குள் போய்ச் சிக்கிக்கொள்ள மாட்டீங்க.  நல்ல வேலை வாய்ப்பபு கிடைக்கும். வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும்.

சிம்மம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் குருவும், எட்டில் ராகுவும், இரண்டில் கேதுவும், ஏழாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். மேரேஜ் ஆகி பாப்பாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கறவங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும். வேலை பார்க்கறவங்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் தடை, தாமதத்துக்குப் பிறகு சம்பள உயர்வு கிடைக்கும். கைவசம் பணப்புழக்கம் அதிகமாகும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். முயற்சியோடு பிசினஸ் செய்யறவங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. கவலையை விடுங்கப்பா. நல்லதே நடக்கும்.

perumal

கன்னி: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் குருவும், ஏழில் ராகுவும், ராசியின் மீது கேதுவும், ஆறாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் கோள் எதுவும் சொல்லாதீங்க. உங்களுக்குள்ளே சின்னதாய் ஒரு தேவையற்ற / கற்பனை பயம் இருக்கவே செய்யும். ஆனாலும், இருந்தாலும் தைரியம் மாதிரி காண்பிச்சுக்கிட்டு, எதையும் செய்து வெற்றிகரமா முடிச்சுடுவீங்க. மாணவர்களுக்கு அருமையான வருடம் இது. நல்லா படிச்சுத் தேர்வுகளை எழுதுவீர்கள். உங்களுக்காகவோ மற்ற யாருக்கோ கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கிக் கொடுக்காதீங்க. பயணங்களில் வெற்றி கிடைக்கும்.

துலாம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குருவும், ஆறில் ராகுவும், பன்னிரண்டில் கேதுவும், ஐந்தாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். நல்லதே நடக்கும். டவுட் வேணாம். கூடுமானவரை பெரிய அளவிலான ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்ங்க. புதிய தொழில் செய்வதானால் மிகவும் கேர்ஃபுல்லா இருங்க. கணவன், மனைவி உறவில் சந்தோஷங்கள் அதிகமாகும். அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி, சமாதானமாகி உங்களுக்கிடையே உள்ள நெருக்கம் அதிகமாகும். பேச்சில் கவனமாக இருங்க. யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம். யாரிடமும் ‘போட்டுக்கொடுக்க’ வேண்டாம். வண்டி வாகனத்தில் போகும்போது மிகவும் கவனமாகப் போங்க.

விருச்சிகம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குருவும், 5ல் ராகுவும், பதினொன்றில் கேதுவும் நாலாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். மிகுந்த மனநிறைவோடு இருப்பீங்க. அரசு தேர்வுகள் எழுதலாம். உங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பார்க்கப்போறாரு / போறாங்க.  இதனால குடும்பமே குதூகலத்தில் மிதக்கும். இந்த வாரத்துல அதிர்ஷ்டம் அதிகமாகும். உறவினர்களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. திருமண வாய்ப்பு உறுதியாகும். மனசுக்கு நெருக்கமானவருடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மனோதிடம் மிக்கவர்கள் என்று மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்துகொள்வீங்க. மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள், உங்களோட சொந்த முயற்சியாலேயே விடுபடும்.

Sri Kanchi Kamatchi amman

தனுசு: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் குருவும், 4ல் ராகுவும், பத்தாம் வீட்டில் கேதுவும், மூன்றாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன வயசானாலும், புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். சிரத்தையுடன், அக்கறையோட கத்துக்குவீங்க. அடிக்கடி பயணம் செய்ய வேண்டி வரும். அந்தப் பயணங்களால் நீங்கள் ரொம்ப நாளாய் எதிர்பார்த்திருந்த நற்பலன்கள் ஏற்படும். எனவே, பயணங்களால் டயர்ட் ஆக மாட்டீங்க. மாறாக உற்சாகம்தான் ஏற்படும். இத்தனைக்காலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். புதிய வீடு பொலிவுடன் ரெடியாகும். நண்பர்களையும் உறவினர்களையும் அழைச்சு விருந்து தருவீங்க.

மகரம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குருவும், 3ல் ராகுவும், ஒன்பதாம் வீட்டில் கேதுவும், இரண்டாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. கடந்த காலத்தில் இருந்து வந்த பணப் பற்றாக்குறை சரியாகிவிடும். பலகாலப் பிரச்னைகள் மெல்லத் தீர ஆரம்பிக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். அல்லது தந்தை வழியில் உங்களை வந்து சேரும். உங்க நண்பர் / சிநேகிதியின் தூண்டுதலால், தீய எண்ணங்களோ, குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்கும் நினைப்போ, யாரையும் கெடுக்கும் எண்ணமோ வராமல் பார்த்துக்குங்க.

கும்பம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் குருவும், 2ல் ராகுவும், எட்டாம் வீட்டில் கேதுவும், ராசியின் மீது சனி பகவானும் இருக்கிறார்கள். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சரீர உதவி கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். அப்படிக் குழப்பம், பிரச்னை, சண்டை ஏதும் ஏற்படாமலேயே காக்க நீங்க முயற்சி செய்யலாம். பலன் இருக்கும். கண், பல் சார்ந்த பிரச்னைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுப்பீங்க. அதனால சரியாகிவிடும். டென்ஷனை குறைத்துக்கொள்வது நல்லது. தேவையே இல்லாமல் குரலை உயர்த்த வேண்டாம். யாரோடும் வாக்குவாதமே செய்ய வேண்டாம். உங்க பெருமையைப் பேசாதீங்க.

மீனம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் குருவும், ராசியின் மீது ராகுவும், ஏழாம் வீட்டில் கேதுவும், பன்னிரண்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். உங்க பேச்சில கவனமாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசிடாதீங்க. எதிர்பாலினத்தவர் உங்ககிட்ட நடந்துகொள்ளும் முறைக்கு நீங்க ரியாக்ட் செய்யும் விதம், நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேணுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். ரிஸ்க்கியான மற்றும் தப்பு வழிக்குத் தூண்டும் நட்புகளை தவிர்த்து விடுங்கள். சகோதர, சகோதரிகளின் அன்பும் ஆதரவும் மனதுக்கு சந்தோஷம் தரும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT