Ducks 
கோகுலம் / Gokulam

குவா குவா வாத்துகள்... சுவாரஸ்ய குறிப்புகள்!

வாசுதேவன்

தனி ஸ்டைலில் அழகாக நடந்து செல்லும் வாத்துகள் பற்றிய விவரங்கள்

  • வாத்துகள் நீர்வாழ் கோழி இனத்தை சார்ந்தவை.

  • இறகுகள் இருந்தாலும் அதிக தூரம், அதிக உயரம், அதிக நேரம் பறக்க இயலாது.

  • இவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு அதிக டிமாண்ட் உண்டு.

  • ஆண் வாத்துகள் பெண் வாத்துகளை விட உயரமாகவும், நீண்ட கழுத்துகள் கொண்டும் உள்ளன.

  • இவை அச்ச குணம் கொண்டவை.

  • வாத்துகள் மற்றும் அவைகளின் முட்டைகள் கோழிகளின் எடை அவற்றின் முட்டைகளின் எடை விட கூடுதல் எடை கொண்டவை.

  • வாத்துகள் முட்டைகளை அவை வளரும் இடத்திலேயே இடும்.

  • இவை பெரும்பாலும் விடியற் காலையில் முட்டைகள் இடும்.

  • வருடத்திற்கு 50 முட்டைகளுக்கு மேல் இடக்கூடியவை.

  • இவை நீர் நிலைகள், நிலப் பகுதியில் திரிந்துக் கொண்டு இருக்கும்.

  • நீரில் நீந்தி செல்வதை வாத்துகள் மிகவும் நேசிக்கும்.

  • இவைகளால் பனி மீது நடந்து செல்ல முடியும்.

  • இவற்றின் கழிவுகள் மீன்களுக்கு உணவாகவும், வயல் வெளிகளில் உரமாகவும் பயன் படுகின்றது.

  • நாட்டு வாத்துகளுக்கு தண்ணீர் தேவையில்லை. எந்த வகை சீதோஷ்ன நிலையிலும் வளரும் நாட்டு வாத்துகள்.

  • வாத்துகளின் கால்களில் நரம்புகள் இரத்த நாளங்கள் இல்லை. அதனால் தண்ணீர் குளிச்சியாக இருந்தாலும் உணர முடியாது.

  • இவற்றின் குவாக் குவாக் சப்தம் எதிரொலிக்கும்.

  • வாத்துகள் பயந்த சுபாவம் உள்ளதால் கூட்டமாகவே இருக்கும்.

  • வாத்துகளில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

  • மாண்டாரின் வகை வாத்துகள் பல நிறங்கள் கொண்டவை.

  • அண்டார்டிக்கா கண்டத்தை தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் வாத்துகளை காணலாம்.

  • காட்டு வாத்துகள் 20 வருடங்கள், வீட்டு அல்லது பண்ணைகளில் வசிக்கும் வாத்துகள் பொதுவாக 12 - 15 வருடங்கள் உயிர் வாழ்கின்றன.

  • இவற்றிற்கு கண்கள் பார்வை மிகவும் நன்றாக உள்ளன. இவைகளுக்கு மூன்று கண் இமைகள் உள்ளன.

  • வாத்துகள் தங்கள் உணவுகளை தண்ணீரில் தேடும். சின்ன சின்ன மீன்கள், மீன்களின் முட்டைகள், தவளைகள், பூச்சிகள், நத்தை, விதைகள், பழங்கள் போன்றவற்றை உண்ணும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT