உலக தாய்ப்பால் வாரம் 
மங்கையர் மலர்

உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 5): குளியல் சோப்புக்கு பதிலாக தாய்ப்பால் பயன்படுத்தலாமா?

Lactation Consultant டாக்டர். சோனாலி சந்தானம்

எல்.ரேணுகாதேவி

பெற்றோரின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்!

  • பால் சுரப்பதை உறுதிப்படுத்த கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு முன்பாகவே பம்ப் செய்யலாமா? அப்படியெனில் எத்தனை வாரங்களுக்கு முன்பு தொடங்கவேண்டும்?

    குழந்தை பிறப்பதற்கு முன்பு தாய்ப்பால் பம்ப் செய்யும் முறை அனைத்து தாய்மார்களுக்கும் அறிவுறுத்தப்படுவதில்லை. கர்ப்பகால நீரிழிவு மற்றும் PCOS போன்ற பிரச்சனைகளால் குறைந்தளவு தாய்ப்பால் சுரக்கலாம் என்ற நிலை இருப்பின், அப்பெண்களுக்கு மட்டும் குழந்தை பிறப்புக்கு முன்பாகவே தாய்ப்பால் பம்ப் செய்யும் முறை அறிவுறுத்தப்படுகிறது.

  • பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைக்கு தனியாக வைட்டமின் டி கொடுக்க பரிந்துரைக்கின்றனர். தாய்ப்பாலில் வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லையா? அது போதாதா?

    தாயின் பாலில் வைட்டமின் டி இல்லை. பிறந்த குழந்தை ஆறு மாதங்கள் வரை சூரிய ஒளியில் இருந்து போதுமான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்தை பெற்றுக்கொள்ள முடியாது. குழந்தையின் முதல் ஆறு மாதகாலம் தசை வளர்ச்சியின் முக்கியமான காலகட்டமாகும். மேலும், குழந்தை பிறந்து ஆறு மாத காலத்திற்குத் தேவையான வைட்டமின் டியை அது கருவில் இருக்கும்போதே சேமித்து வைத்திருக்கும். இந்த வைட்டமின் டி சத்து தாயிடமிருந்துதான் குழந்தைக்குக் கிடைக்கிறது. எனவே, வைட்டமின் டி குழந்தைக்கு போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி கர்ப்ப காலத்தில் தாய்க்கு போதுமான  வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்வதாகும்.

  • சில பெண்களின் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். தாய்ப்பாலில் கொழுப்பு சத்தினை அதிகரிக்க வழி உள்ளதா?

    பாதாம், வால்நட்ஸ் உள்ளிட்ட உலர் பருப்பு வகைகள் மற்றும் சியா விதைகள், இளநீர்,தேங்காய் போன்ற நல்ல கொழுப்புகளை சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பாலில் கொழுப்பு சத்தினை அதிகரிக்க முடியும்.

  • குழந்தைக்கு தாய்ப்பாலை உணவாக அளிப்பதைத் தவிர, அதனை குழந்தையின் குளியலில் சோப்பு, லோஷன் போன்று பயன்படுத்தலாமா? குழந்தைக்கு ஏற்படும்  தோலழற்சி, வறண்ட சருமம் போன்ற சரும நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க தாய்ப்பால் உதவுகிறதா?

    சோப்பு மற்றும் லோஷன் போன்றவற்றில் தாய்ப்பாலை பயன்படுத்துவது ஒரு நல்ல யோசனைதான்.  ஆறு மாதங்களுக்கும் மேலாக உள்ள குழந்தைக்கு தாய்ப்பாலை நீங்கள் கூறிய முறைகளில் பயன்படுத்தலாம். ஆனால், அதனை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்… மிகுந்த கவனத்துடன்!

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT