மங்கையர் மலர்

சம்மணங்கால் போட்டு சாப்பிடுவது நல்லதா?

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கல்கி டெஸ்க்

- புஷ்பலதா, அடையாறு.

ம்மணங்கால் இட்டு சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்கிறது அறிவியல்.       

நமது உடல் இடுப்பை மையமாக வைத்து, கீழ் உடல், மேல் உடல் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் முக்கியமான உடல் உறுப்புகள் பலவும் மேல் உடலில்தான் இருக்கின்றன. கீழ் உடலில் கால்கள் மட்டுமே இருக்கின்றன.

கால்களுக்கு நடக்கும்போது மட்டும்தான் ரத்த ஓட்டம் தேவைப் படுகிறது. மற்ற வேளைகளில் மேல் உடலில் இருக்கும் கண், காது, மூளை, கணையம், நுரையீரல், சிறுநீரகம், போன்றவைக்குதான் ரத்த ஓட்டம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

சாப்பிடும்போது கீழே தரையில் சம்மணங்கால் இட்டு உணவு உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது. மேல் உடலுக்குத் தேவையான அளவு ரத்த ஓட்டம் செல்லும். இதனால் மேல் உடல் பாகங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

முக்கியமாக செரிமான மண்டலம் வலுப்பெற்று, செரிமானம் சீராகவும், அஜீரணக் கோளாறுகள், வயிறு பிரச்னைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.

மாறாக, கால்களைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது,  போதுமான ரத்த ஓட்டம் மேல் உடலுக்குச் செல்லாமல், தேவையின்றிக் கீழ் உடலிலுள்ள கால்களுக்குச் செல்லும். இதனால் மேல் உடலின் செயல்திறன் பாதிக்கப்படும்.

உணவைக் கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்!

நுங்குக்கு உண்டு நற்குணம்!

சாப்பிடச் சுவையானதும் இலகுவானதுமான நுங்கு, கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

நுங்கை வெட்டியவுடன் சாப்பிடுவது நல்லது. காரணம், இது விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடையது.

நுங்கில் ஆந்த்யூசைன் என்னும் ரசாயனம் உள்ளது. அந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.

நுங்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது.

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வியர்க்குருவுக்கு நுங்கில் உள்ள நீரைத் தடவினால், வியர்க்குரு உடனே மறைந்துவிடும்.

த்தச் சோகை உள்ளவர்களுக்கு நுங்கு ஒரு நல்ல மருந்தாகும்.

லச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

ல்லீரலைப் பாதுகாக்கும் கவசமாக விளங்குகிறது நுங்கு.

நுங்கில் இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம்,  சோடியம், பொட்டாஷியம் மற்றும் புரதச் சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

 -- ச. மதுரவாணி, சென்னை

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT