நடனமாடுதல் www.scmp.com
மங்கையர் மலர்

பெண்கள் வீட்டிலேயே எடையைக் குறைக்க எளிய வழி!

கல்கி டெஸ்க்

-நித்தீஷ்குமார் யாழி

திகமான உடல் எடையை உடைய பெண்கள் இன்றளவும் பலரால் கேலி செய்யப்பட்டுவருவதை நெடுநாட்களாக பார்த்து வருகிறோம். ஓர் ஆண் அதிக எடையுடன் இருந்தால் அவன் உடற்பயிற்சி கூடம் சென்று அல்லது விளையாட்டு மைதானம் சென்று உடற்பயிற்சி செய்ய அவனுக்கு வாய்ப்பும் நேரமும் கிடைக்கிறது.

ஆனால், ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்புகள் எளிதில் கிடைப்பது இல்லை. அவர்கள் வீட்டுவேலையைச் செய்யவேண்டும்; நேரத்திற்கு சமைத்துத் தர வேண்டும் என்பதும், ஆண்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு வீட்டில் அனுமதி தரமறுப்பதும் பெண்களுக்கு சிரமமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட பெண்களுக்கு வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்க எளிய வழிகளில் ஒன்று நடனமாடுதல்.

ஆம், நம்மில் பலர் நடனத்தை ஒரு பொழுதுபோக்கு என்றும் அல்லது இது ஒரு கலை என்றும் பார்த்து இருப்போம். ஆனால், நடனமாடுதல் ஒரு சிறந்த உடற்பயிற்சியும்கூடதான்.

ஒரு நபர் ஒரு மணிநேரம் நடனமாடுவதால் சுமார் 250 – 330 வரை உடலில் உள்ள கலோரியைக் குறைக்கலாம். மேலும், இதன் மூலம் பெண்கள் பி.சி.ஓ.டி பிரச்னையில் இருந்தும் விடுபடலாம். உடல் எடை‌ குறைப்பது மட்டுமின்றி நடனத்தில் மேலும் சில நன்மைகள் உண்டு.

·         நினைவாற்றலை அதிகரிக்கும்.

·         மகிழ்ச்சியை மேம்படுத்தும்.

·         மன அழுத்தத்தை குறைக்கும்.

·         சீரான‌ ரத்த ஓட்டத்திற்கு உதவும்.

·         ஆற்றல் அதிகரிக்கும்.

பி.கு:- நடனம் என்பது முறையாகப் பயின்ற பாரம்பரிய நடனமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. நமக்கு பிடித்த இசையை / பாடல்களை பின்னணியில் போட்டுவிட்டு நம் மனதிற்கு ஏற்றவாறு ஜாலியாக ஆடலாம்! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தனிமையிலும் ஆடி மகிழலாம்!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT