* 40 வாட்ஸ் பல்பிற்குப் பதிலாக டீயூப் லைட் உபயோகியுங்கள். டியூப்லைட் 100 வாட்ஸ் பல்ப் அளவிற்கு வெளிச்சம் தருவதோடு 60 சதவீத மின்சாரம் மிச்சப்படுத்தலாம்.
* டியூப்லைட்களில் பழைய 'சோக்'குகளைப் பயன்படுத்தாமல் எலெக்ட்ரானிக் சோக்குகள் பயன்படுத்தினால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம்தான் செலவாகும்.
* பார்வையாளர் அறையில் டிம்மர் சுவிட்சுகள் அமைத்திருந்தால், அவர்களுடன் பேசும்போது விளக்குகள் பிரகாசமாக எரியவும் மற்ற நேரங்களில் டிராயிங் ரூமில் மங்கலான வெளிச்சமும் எரிய உதவுவதோடு மின்சக்தியும் குறைவாகச் செலவாகும்.
* அறைகளில் வண்ணம் பூச லைட்கலர் பயன் படுத்தினால் 40 சதவீத மின்சாரம் மிச்சமாகும். குறைந்த மின்சக்தி விளக்குகள் லைட்கலர் அறைகளுக்கு நிறைந்த வெளிச்சம் தரும்.
* பல்புகளை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். தூசியும் அழுக்கும் பல்பின் 30 சதவீத வெளிச்சத்தைக் குறைகின்றன.
* ஃபேனை அடிக்கடி சுத்தம் செய்து எண்ணெய் போடுங்கள். எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர் பொருத்துவதால் மின்சாரம் மிச்சமாகும்.
* கெய்ஸர்களில் உள்ள வெப்பப்படுத்தும் சாதனத்தை (Heater Element) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றினால் தண்ணீர் விரைவில் வெந்நீர் ஆவதோடு மின்சாரமும் மிச்சமாகும்.
* ஏசி சாதனத்தை ஆஃப் செய்ததுடன் ஏரி அறையின் ஜன்னல்களை முடிவிட்டால் சிறிது நேரம் மின்சார செலவில்லாமல் அறை குளிர்ச்சியாக இருக்கும் ஏசி சாதன ஃபில்டரை இரு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் அதிக அளவு மின்சாரம் செலவாவதை மிச்சப்படுத்தலாம். ஏசி சாதனத்தை ஒரு மணி நேரம் நிறுத்தினால் 40 வாட்ஸ் டியூப் 50 மணி நேரம் எரியும் அளவிற்கு மின்சக்தி மிச்சமாகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
* அயர்ன் செய்யும்போது முதலில் குளிர்ந்த வெப்பத்தில் அயர்ன் செய்யும் துணிகளைத் தேய்த்து நேரம் செல்லச் செல்ல அதிக வெப்பம் வேண்டிய ஆடைகளை அயர்ன் செய்யும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க மின் செலவு குறைவாகும்.
* குடும்பத்திற்குத் தேவையான அளவு ஃபிரிட்ஜை வாங்குங்கள். அதிக அளவு ஃபிரிட்ஜ் அதிக மின்சாரம் செலவாகும்.
* வேண்டிய அளவிற்குக் குளிர்ந்தபின் உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் மின்சாரம் மிச்சமாகும்.
* ஃபிரிட்ஜின் லைனிங் கேஸ்கட் கெட்டுப்போனால் மாற்றி விடுங்கள்.
* ¼" அளவில் ஐஸ் உருவாகிவிட்டால் டீஃப்ராஸ்ட் செய்துவிட மின்சாரம் மிச்சமாகும்.