உலக தாய்ப்பால் வாரம் 
மங்கையர் மலர்

உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 6): நீண்டகாலம் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள நன்மைகள் என்ன?

Lactation Consultant டாக்டர். சோனாலி சந்தானம்

எல்.ரேணுகாதேவி

பெற்றோரின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்!

  • எத்தனை மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கவேண்டும்? நீண்டகாலம் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள நன்மைகள் என்ன?

    உலக சுகாதார மையம் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வலிறுத்துகிறது. பச்சிளம் குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால், அது, வயிறு சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. அதுபோல் ஒன்பது மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதால், அடோபிக் டெர்மடைடிஸ் (atopic dermatitis) மற்றும் அரிப்பினால் ஏற்படும் தோலழற்சியின் நிகழ்வுகளைத் தவிர்க்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

    குழந்தைக்கு 2 முதல் 3 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதால் தாய் கர்பபைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார். தாயின் குடும்பத்தில் யாருக்காவது கர்பபைவாய் புற்றுநோய் இருந்தால், இளம் தாய்மார்கள் நீண்டகாலம் தாய்ப்பால் கொடுப்பது அவரின் எதிர்காலத்திற்கு நல்லது.

  • தாய்ப்பால் கொடுப்பதினால் ஒரு சிலருக்கு மார்பகத்தைச் சுற்றி வெடிப்புகளும் கொப்பளங்களும் ஏற்படுகிறதே? இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

    இது பொதுவான பிரச்னை அல்ல. தாய்ப்பால் கொடுப்பதில் சிலருக்கு மட்டும் மார்பக பகுதியில் கொப்பளங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதும் ஏற்படும் உராய்வின் காரணமாக நிகழ்கிறது. அதேபோல், நாக்கு ஒட்டி அல்லது உதடு ஒட்டி (Tongue tie அல்லது  Lip tie என்று சொல்வார்கள்.) பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். இதனால் அக்குழந்தையின் வாயில் பூஞ்சை தொற்று உருவாகும். குழந்தைக்கு ஏற்படும் இந்த பூஞ்சை காரணமாகவும் தாய்க்கு கொப்பளங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • உதடு ஒட்டி மற்றும் நாக்கு ஒட்டி இருக்கக்கூடிய நிலை எத்தனை பொதுவானது? குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

    குழந்தைகளுக்கு பிறக்கும்போதே ஏற்படும் Tongue and Lip Tie பிரச்னைகள் தற்போது சாதாரண விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. Tongue and Lip Tie குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதின் காரணமாக இந்த குறைபாட்டின் எண்ணிக்கை அதிகளவு தெரியவருகிறது.

    Tongue and Lip Tie குறைபாடு உள்ள எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் எடுத்துக்கொள்வதில் சிரமம் இருக்கும் என சொல்லமுடியாது. இப்பிரச்சனை உள்ள குழந்தைகள் நன்றாக தாய்ப்பால் எடுத்துக்கொள்ளக்கூடியவர்களாகவும் உள்ளனர். ஆனால், அதேநேரம் Tongue and Lip Tie உள்ள குழந்தையால் தாய்க்கு மார்பக பகுதியில் வலி ஏதேனும் உள்ளதா என தெரிந்துக்கொள்ளவேண்டும். இந்தப் பிரச்னையை சரிசெய்ய தற்போது நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. இதன்காரணமாக Tongue and Lip Tie உள்ள குழந்தைகளுக்கு சிறு சிகிச்சை மூலம் அதனை சரிசெய்துவிடலாம்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT