Marriage Assistance Schemes 
மங்கையர் மலர்

தமிழக அரசு என்னென்ன திருமண உதவித் திட்டங்களை வழங்குகிறது?

சங்கீதா

தமிழக அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித் திட்டம் என பல வகையான நல உதவி திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. மேலும் திருமணத்தின் போது தங்கத்தால் ஆன மாங்கல்யம் போட்டுக்கொள்வது நம் கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள குடும்பங்களின் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு உதவியாக அரசு குறிப்பிட்ட தொகையும், தங்க நாணயமும் கொடுக்கிறது. அதாவது மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்கள், ஏழை பெற்றோர்களின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் திருமணத்திற்கு உதவிடும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு கல்வித் தகுதி மற்றும் வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 

திட்டம்-1

கல்வித்தகுதி இல்லாத மறுமணம் செய்துக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.25,000/- நிதியுதவியில் ரூ.15,000/- வங்கி கணக்கிலும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொகையுடன் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

திட்டம்-2

டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 50,000/- அதில் ரூ. 30 ஆயிரம் நேரடியாக வங்கி கணக்கிலும், ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையுடன் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

2. ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்

ஏழை விதவைத் தாய்மார்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம்-1

25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாகவும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. ஏழை விதவையின் ஒரு மகள் மட்டுமே தகுதியானவர்.

திட்டம்-2

டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. ஏழை விதவையின் ஒரு மகள் மட்டுமே தகுதியானவர்

3. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்

இந்த திட்டம் தாய், தந்தை இல்லாத பெண்ணிற்கு வழங்கப்படும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு குறிப்பிட்ட வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி தேவையில்லை. 

திட்டம்-1

படிக்காத பெண்களாக இருந்தால் ரூ.25,000 நிதியுதவியும், 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

திட்டம்-2

டிகிரி மற்றும் டிப்ளமோ படித்திருந்தால் ரூ.50,000 மற்றும் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 

4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

இத்திட்டம் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் வகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. 

திட்டம்-1

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் ரூபாய் 25,000 நிதியுதவியில் ரூ.15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கிலும், ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும், 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 

திட்டம்-2

டிப்ளமோ, டிகிரி பெற்றவர்களாக இருந்தால் ரூ.50,000 நிதியுதவியில் ரூ.30 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கு மூலமாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு சான்றிதழாகவும் 22 கிராம் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. 

5. கலப்பு திருமணத்தை பொருத்தவரை

வகை 1

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளில் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும். மற்றொருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

வகை 2

கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொது பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT