பிரதமர் மோடி  
velaivaaippu

வடகிழக்கு மாநிலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க புதிய திட்டம்!

க.இப்ராகிம்

ந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் அதிகமான வேலை இல்லாத் திண்டாட்டம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஒன்றிய அரசு புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றமான சூழலுக்கு, அந்த மாநிலங்களின் வளர்ச்சியின்மையே முக்கிய காரணமாக இருக்கிறது. எட்டு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இம்மாநிலங்களில் கல்வியறிவு குறைவு, அமைதியின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து இம்மாநிலங்களை முன்னேற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் பிரதமரின், கவுஷல் விகான் யோகனா, தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், ஜன் கிஷான் சன்ஸ் தான்யா ஆகிய திட்டங்கள் மூலம் எட்டு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் பல துறை சார்ந்த பயிற்சி, நிதி மேலாண்மை, முதலீட்டை திரட்டுவதற்கான வழிகள், நிர்வாகத் திறன் மற்றும் செயல்முறை பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட உள்ளன.

மேலும், இந்தத் திட்டத்துக்காக 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, மாநிலங்களின் வளர்ச்சியும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் மேம்படும் என்றும், அந்த மாநிலங்களின் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT