2023 Year Ender 
செய்திகள்

2023ல் இந்தியாவில் கவனம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள்!

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களுக்கு பல்வேறு படிப்பினை விட்டுச்செல்கின்றன. அந்தவகையில் இன்னும் சில தினங்களில் விடைபெற காத்திருக்கும் 2023ம் ஆண்டில், இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்...

ஜி.எஸ்.எஸ்.
2023 Highlights

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ந்தியாவில் தற்போதுவரை பேசுப்பொருளாக உள்ள விஷயம் என்றால் அது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2016ம் ஆண்டு முதல் செல்லாத என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதுதான். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 56 வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதனையடுத்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பணமதிப்பிழக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

பதவி விலகிய ப்ரிஜ் பூஷன்!

ப்ரிஜ் பூஷன்

பாஜக எம்.பி.யும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங் மீது பல இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை முன்வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்ஷி மாலிக், வினோஷ் போகோட், பஜ்ரங் புனியா போன்ற பிரபல குத்துச்சண்டை வீரர்கள் எதிர்ப்பில் முன்னணியில் இருந்தனர். வீரர்களின் கடும் போராட்டத்திற்கு ப்ரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அதன்பின்னர் அவர் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தலைவர் பகுதியிலிருந்து நீக்கப்பட்டார்.

மீண்டும் எம்.பியான ராகுல்காந்தி!

ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது அரசியல் பிச்சாரத்தின்போது, மோடி சமூகத்தை அவமதித்தார் என்பது தொடர்பான வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் உச்சநீதிமன்றம் பின்னர் அந்த அந்த தீர்ப்புக்கு தற்காலி தடைவிதிக்க, நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்.

முதல்வரான சித்தராமையா!

சித்தராமையா

மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி கே சிவகுமார் ஆகியோர் இருவரும் கடுமையாக போட்டியிட, காங்கிரஸ் தலைமை நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சித்தராமையா முதல் அமைச்சராகவும் சிவகுமார் துணை முதல் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டடம்!

திய நாடாளுமன்றம் கட்டடம்

க்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் எண்ணிக்கை மற்றும் அலுவலக நடவடிக்கை விஸ்தரிப்புக்காக 971 கோடி ரூபாய் செலவில் புதியதொரு நாடாளுமன்ற கட்டடம் மே 28 அன்று இயங்கத் தொடங்கியது.

கவனம் பெற்ற I.N.D.I.A கூட்டணி!

INDIA OPPOSITION PARTIES

பாஜக தலைமைக்கு எதிராக 26 கட்சிகள் கொண்ட இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A) ஜூலை 11 அன்று உருவானது. பிரதமர் வேட்பாளராக இந்த கூட்டணியின் சில முக்கிய தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவை முன்மொழிந்தனர்.

இந்தியாவில் நடந்த ஜி 20 மாநாடு!

ஜி 20 மாநாடு

செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜி 20 மாநாடு பிரதமர் மோடி தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த கூட்டமைப்பில் புதிய உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இந்திய ஒற்றுமை யாத்திரை

இந்திய ஒற்றுமை யாத்திரை

செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு கவனம் ஈர்த்தார் ராகுல்காந்தி. இதை இந்தியாவை இணைக்கும் முயற்சி என்றார் அவர்.

17 மாநிலங்களில் பாஜக தலைமை

பாஜக

டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் மட்டும் ஆறுதல் பரிசாக இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜக கூட்டணி தலைமை ஏற்கிறது.

மாநிலங்களில் புதிய முதலமைச்சர்கள்

ரேவந்த் ரெட்டி

மிசோரம் முதலமைச்சராக லால் துஹோமா, தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி, சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணுதேவ் சாய் . மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் , ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் சர்மா ஆகியோர் பதவியேற்றனர்.

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்

Captain Vijayakanth

தேமுதிக தலைவரும் தமிழக சட்ட சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், மேற்கு வங்க ஆளுநராக இருந்த கேசரி நாத் திரிபாதி, மத்திய சட்ட அமைச்சராக விளங்கிய சாந்தி பூஷன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக விளங்கிய வெங்கட் ரமணன், உச்சநீதிமன்ற நீதியரசராக விளங்கிய பாத்திமாபீவி ஆகியோர் இந்த ஆண்டில் இறந்தனர்.

மணிப்பூர் கலவரம்

2023 year Ender

ணிப்பூரில் மெய்க்கி, குக்கி ஆகிய இரண்டு இனப் பிரிவுகளுக்கு இடையே உண்டான கலவரங்களைத் தொடர்ந்து 175க்கும் இறந்தனர். அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக விமர்சிக்கப்ட்டது.

அதானிக்கு எதிரான ஹிண்டரபர்க்

அதானி குழுமத்துக்கு எதிராக வெளியான ஹிண்டரபர்க் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து பாஜக அரசின் மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

மஹுவா மொய்த்ரா!

mahua moitra

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம் பி க்களில் ஒருவரான மஹுவா மொய்த்ரா பல கேள்விகளால் மத்திய அரசை துளைத்து எடுத்தவர். இவரது பெரும்பாலான கேள்விகள் அதானி குடும்பம் தொடர்பாக இருந்தன. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹீரானந்தானியிடம் இவர் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மக்கள் நீதிமுறை குழு விசாரணை ஒன்று நடத்தப் ‘பட்டது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அவரது எம்பி பதவி பறிமுதல் செய்யப்பட்டது.

370வது சட்டப்பிரிவு செல்லும்!

Jammu Kashmir

2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு முன்னெடுத்த அத்தனை நடவடிக்கைகளும் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ‘இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு தனி இறையாண்மை உரிமை இல்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும்’ என்று ஐந்து நீதிபதிகள் அமர்வைக்கொண்ட இந்த வழக்கில் ஒருமித்த தீர்ப்பை சமீபத்தில் வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

141 எம்பிக்கஸ் சஸ்பெண்ட்!

141 MP'S Suspend

டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. மஞ்சள் நிற புகை குண்டுகளை வீசி அவையிலிருந்த உறுப்பினர்களை பதற வைத்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைப்பாடுகள் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட, இதுவரை இல்லாத அளவில் 141 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரலாற்றில் இடம்பெற்றது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT