செய்திகள்

‘500 ரூபாய் கள்ள நோட்டு அதிகரித்து உள்ளது’ ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

கல்கி டெஸ்க்

ந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் தனது ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டு இருக்கிறது. அதில் கடந்த ஆண்டை விட, 2022 – 23ம் ஆண்டு கண்டறியப்பட்டு இருக்கும் 500 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4 சதவிகிதம் அதிகரித்து, 91,110 துண்டுகளாக இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது. அதேசமயம் 2000 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் மதிப்பு 9,806 ஆகக் குறைந்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

கடந்த முந்தைய ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 20 ரூபாய் நோட்டுக்களில் 8.4 சதவிகிதமும், 500 ரூபாய் புதிய நோட்டுகளில் 14.4 சதவிகிதமும் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர, 10 ரூபாய், 100 ரூபாய்  மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளில் 11.6 சதவிகிதம் குறைந்திருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. மேலும், வங்கித் துறையில் கண்டறியப்பட்டிருக்கும் மொத்த போலி இந்திய நாணயத் தாள்களின் எண்ணிக்கை முந்தைய நிதி ஆண்டில் 2,30,971 எண்ணிக்கையில் இருந்தது. அது தற்போது 2022 – 23 நிதி ஆண்டில் 2,25,769 ஆகக் குறைந்து இருக்கிறது என்றும் கூறி இருக்கிறது.

2022 - 23ம் ஆண்டில், வங்கித் துறையில் கண்டறியப்பட்டிருக்கும் மொத்த போலி இந்திய நாணயத் தாள்களில் 4.6 சதவிகிதம் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவிகிதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 2022 - 23ம் ஆண்டில் செக்யூரிட்டி பிரிண்டிங்கிற்கான மொத்தச் செலவு 4,682.80 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 4,984.80 கோடி ரூபாயாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT