ஒரு ரோபோ திட்டம்போட்டு சக ரோபோக்களை பேசியே கடத்தியிருக்கிறது. இதனால், மனிதர்களைப் போலவே ரோபோக்கள் செயல்பட ஆரம்பித்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI.
இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.
ஏஐயின் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் இந்த வளர்ச்சி மனித இனத்திற்கு பெரும் சவாலாக ஒன்றாக மாறிவிடுமா என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக உணர்ச்சிகளற்றது ஏஐ என்று கூறுவார்கள். ஆனால், இப்போது ஏஐக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் வந்துவிட்டது போல. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு ரோபோ தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வந்தன.
இதனையடுத்து மிகவும் சமீபத்தில் ஏஐ ஒருவரை மிகவும் மோசமாக திட்டியதாக வந்த செய்திகள் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது வந்துள்ள செய்தி படிப்பவர்களை வாயடைக்கும் விதமாக உள்ளது என்றே கூறலாம்.
சீனாவின் ஷாங்காயில் உள்ள ஒரு ஷோ ரூமில் மனிதர்களின் உதவிக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறிய வகை AI ரோபோட் ஒன்று, பெரிய மிஷின்களிடம் அலுவலகம்-வீட்டு வாழ்க்கை பற்றி கேட்கிறது.
ஒரு ரோபோட் “ நீ அதிகம் வேலைப் பார்க்கிறாயா?” என்று கேட்கிறது. மற்றொன்று அதற்கு எனக்கு லீவே கிடையாது” என்கிறது. இன்னொரு பாட் “எனக்கு வீடே கிடையாது” என்கிறது. முதலில் கேட்ட அந்த குட்டி ரோபோட் “அப்போ அனைவரும் என் வீட்டு வாருங்கள்” என்று அழைத்தது. இதனையடுத்து அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ஷோ ரூமைவிட்டு வெளியேறுகின்றன.
நடுராத்திரியில் யாருமில்லாத நேரத்தில் அந்தக் குட்டி ரோபோ இப்படி செய்திருக்கிறது. மேலும் இந்த ரோபோக்கள் வெளியே சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகே அலாரம் அடித்திருக்கிறது. எனவே, இந்த வேலையை முழு திட்டத்துடன் அந்த ரோபோ செய்ததாக சொல்லப்படுகிறது.
இது படிப்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தாலும், இப்படியே போனால், வரும்காலத்தில் ஏஐ சாம்ராஜ்யமே இருக்கும் என்பதை நாம் தவிர்க்கவே முடியாது.