தமிழகத்தில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.
நவீனகாலத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அதுவும் ஆண்ட்ராய்டு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. செல்போன் என்றாலே அதை தொடர்பு கொள்ள சிம் கார்டு அவசியமானதாகும். அப்படி பலரும் ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என பல நிறுவனத்தின் சிம் கார்டுகளை உபயோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் குறித்து மக்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பினர், அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அதில், இந்தியாவில் அதிக செல்போன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் ஜியோ என்றும், மொத்தம் 43,63,07,270 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக ஏர்டெல் 37,23,15,782 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
அதனை தொடர்ன்ந்து வோடாபோன் - ஐடியா 23,09,41,435 வாடிக்கையாளர்களை கொண்டதாகவும், பிஎஸ் என் எல் 10,14,91,015 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் இந்தியாவை பொறுத்தவரை ஜியோ முதலிடத்தில் இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை ஏர்டெல் தான் 2,74,98,627 வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்தே ஜியோ, பி எஸ் என் எல் நிறுவனங்கள் உள்ளது.