செய்திகள்

சென்னை மக்களே அலெர்ட்.. இனிமே இந்த ஸ்பீடுல தான் வண்டி ஓட்டனும்.. மீறினால் அபராதம்!

விஜி

சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனால்,வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முன்னதாக, சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அந்த வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து தற்போது மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி 40 கி.மீ வேகம் வரை செல்லலாம். இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Chennai speed limit

போக்குவரத்து காவல்துறையினர் கைகளினால் இயக்கும் ரேடார் கருவி கொண்டு வாகனங்களின் வேகத்தை கணக்கிடுவர். வேக கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளிடம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வாகனங்களின் வேகத்தை கணக்கிடும் நடவடிக்கையில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT