செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியனை திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனி!

கல்கி டெஸ்க்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டியை அடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் நடக்கவுள்ளது. இதன் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக மைதானத்தை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி இங்கு நடக்க உள்ளதால், இந்த போட்டி தொடங்குவதற்குள்ளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக 2 பெவிலியன்கள் திறக்கப் படவுள்ளன.  புதிய ஸ்டேண்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அது முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், கூடுதலாக 5,306 இருக்கைகள் கொண்ட புதிய பெவிலியன் அமைக்கும் பணி முடிவடைந் ததையடுத்து, திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெவிலியன்களை வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அவருடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  

ஐபிஎல் 16ஆவது சீசன் போட்டிகள் வரும் 31 ஆம் தேதி ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஏற்கெனவே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT