China and Russia entered the Israel-Palestine war. 
செய்திகள்

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் உள்ளே நுழைந்த சீனா மற்றும் ரஷ்யா! 

கிரி கணபதி

ஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போர் உச்சமடைந்துள்ள நிலையில் இந்த போர் பற்றி சீனாவும் ரஷ்யாவும் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ராணுவ கைது செய்துவைத்துள்ள பாலஸ்தீன இளைஞர்களை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்ட நிலையில், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். தற்போது காசாவைச் சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் இந்தப் போர் உச்சமடைந்துள்ளது. மேலும், பாலஸ்தீன காசா பகுதியை முழுவதுமாக சுற்றிவளைத்துள்ள இஸ்ரோ ராணுவம் அங்கு கண்முடிதனமாக தாக்குதல் நடத்திவருகிறது.

மேலும்.இஸ்ரேல் - பானஸ்தீனம் விவகாரத்தில் ஈரான், அமெரிக்கா, லெபனான் ஆகிய நாடுகள் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா ஈரான் அருகே தன் நாட்டின் போர்க்கப்பல்களை அனுப்ப உள்ளது. இதில் அமெரிக்காவின் வலிமையான ஆயுதங்களும், போர் விமானங்களும் இருக்கின்றன. இதனால் இந்த போர் நீண்ட காலம் நீடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒருவேளை இது நீண்ட காலம் நடந்தால் இதில் சீனாவும், ரஷ்யாவும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது. அதாவது இந்த போர் குறித்து சீனா சர்ச்சை கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளது. இந்த போரில் சீனா ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக பேசியுள்ளது. "இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே ஏற்படும் வன்முறைகள் குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிதானத்தை கடைப்பிடித்து, அமைதியாக இருந்து, பொதுமக்களைக் காத்து, நிலைமை மேலும் மோசமடையாமல் தவிர்த்து, இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். 

அதே சமயம் இந்த போரில் நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது. ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அந்த அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது. இஸ்ரேல் பாலஸ்தீன போரில் சீனா எப்போதும் நீதியின் பக்கமே நிற்கும். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் நண்பர்கள் என்ற முறையில், இரு நாடுகளும் அமைதியாக வாழ்வதைக் காணவே நாங்கள் விரும்புகிறோம்" என சீனா கருத்து தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த மோதலில் மூன்றாம் படையினர் ஈடுபடுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. எனவே பாலஸ்தீன அரசை உருவாக்குவதுதான் இந்தப் போருக்கு மிகவும் நம்பகமான தீர்வாகும் என்றும், தனியாக போரிடுவது பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யாது என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். 

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT