செய்திகள்

தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு துபாயில் ஒருங்கிணைப்பு மையம்!

க.இப்ராகிம்

மிழ்நாடு தொழில் முனைவோருக்காக துபாயில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்க தமிழ்நாடு தொழில்துறை முயற்சி.

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் உருவாக்கவும், புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் தொழில்துறையை மேம்படுத்தவும் புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோர்களை உருவாக்கவும் ஸ்டார்ட் அப் டி என் என்ற செயலியை தமிழ்நாடு அரசின் தொழில்துறை தொடங்கி நடத்தி வருகிறது.

இதன் புதிய முயற்சியாக உலக நாடுகளின் உடைய சந்தை விவரங்களை அறிந்து கொள்ளவும், முதலீடுகளை பெறவும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும், ஏற்றுமதி இறக்குமதிக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கவும் பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு மையத்தை துபாயில் அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை முயற்சி மேற்கொண்டு இருக்கிறது.

இதற்காக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் துபாயில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் உலக சந்தையில் தமிழர்களுடைய பங்கை அதிகரிக்க வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் அல்லாது புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT