இந்தியாவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க தூதரகங்களில் அமெரிக்க விசாவுக்கான நீண்ட காலம் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க அரசு இந்த பிரச்சனையை விரைவாக தீர்க்கும் பணிகளை பல வகையில் செய்து வந்தாலும் இந்திய தூதரகங்களில் நீண்ட காத்திருப்பு காலம் பலரையும் வியக்க வைக்கிறது.
இந்தியா முழுவதும் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் விசாவுக்கான காத்திருப்பு காலம் மும்பையில் 332 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. கொல்கத்தாவில் 357 நாட்கள், காத்திருப்பு காலம் தொடர்கிறது.
ஆனால் சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை விசாவுக்காக தேர்வு செய்து விண்ணப்பத்தோர் இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சென்னை அமெரிக்க தூதரகத்தில் B1/B2 விசா பெற 680 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுற்றுலா மற்றும் வணிக விசா நியமனங்களுக்காக மிகக் குறைந்த காத்திருப்பு காலம் கொண்டு உள்ளது. டெல்லி அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தோர் 247 நாட்களில் விசா பெற முடியும்.
கொரோனா தொற்றுக்கு பின்பு இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா பெற்ற விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் காத்திருப்பு காலம் நீண்டுக் கொண்டே இருப்பதன் மூலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு உள்ளோர் வேதனை அடைந்து வருகின்றனர்.