இங்கிலாந்தின் மூத்த விமானப் பணிப்பெண் ஒருவர் தனது பிறந்தநாளை விமான வடிவிலான கேக்கை வைத்து கொண்டாடியுள்ளார். பாம் கிளார்க் என்ற இவர் 'நானா பாம்' என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். 73 வயதான இவர் ஈஸிஜெட்டின் மூத்த ஊழியர் ஆவார். இந்த வயதிலும் இன்னும் பணியாற்றி வருகிறார் என்றால் நம்ப முடியுமா.
சமீபத்தில் வேலை இல்லாத இளைஞர்களின் வேதனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் சிலர் படித்தது ஒன்று வேலை பார்ப்பது ஒன்று என பிடிக்காத வேலையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து பெண் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதில், 20 ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதில் நான் இந்த வேலைக்கு விண்ணப்பித்த போது எனக்கு இது ஒரு பொக்கிஷமாக தெரிந்தது. தற்போது நான் தினசரி நிறைய மக்களை சந்திக்கிறேன் அவர்களும் அவர்களது பணியில் இருந்து மாறி நன்றாக இருப்பதை பார்க்கிறேன். அதனால் யாரும் பணியோ, வாழ்க்கையோ மாறுவதை கண்டு பயப்படவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தனக்கு பிடித்த வேலையே தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை சந்திப்பதும், அவர்களிடம் கிடைக்கும் அனுபவம் தான் என கூறுகிறார்.
இவரது இந்த அசாத்திய அனுபவத்தை கண்டால் பலருக்கும் நாமும் ஒரு நாள் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இதுவரை பாம் 4,500 விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார்.
இவரின் நற்குணத்தால் சக ஊழியர்களை கட்டி போட அவர்கள் மகிழ்ச்சியாக அனைவரும் இவரது 73வது பிறந்தநாளில் கலந்து கொண்டனர். இவர் இந்த வாழ்க்கையை மிகவும் விரும்புவதால் விமானம் வடிவிலான கேக்கை வெட்டினர்.
மேலும் இது தொடர்பாக பேசிய ஈஸிஜெட்டின் பீப்பிள் டைரக்டர் ஜேன் ஸ்டோர்ம், ஈஸிஜெட்டில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் மக்களை மையப்படுத்துகிறோம்.
'எங்கள் குழுவில் பாம் இருப்பதில் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம், சிறந்த வாடிக்கையாளர் சேவையில் ஆர்வம் கொண்ட எங்கள் அன்பான மற்றும் வரவேற்கும் கேபின் குழுவினருக்கு அவர் ஒரு சான்றாக இருக்கிறார்.
'எங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து வயதினரையும் கப்பலில் வர ஊக்குவிப்போம். பாமின் 73வது பிறந்தநாள் நெருங்கிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் எங்களுடன் சேர இன்னும் திறமையானவர்களை அவர் ஊக்குவிப்பார் என நம்புகிறோம்.'
கடந்த ஆண்டு பன்முகத்தன்மை பிரச்சாரத்தை ஏர்லைன் தொடங்கியது, இதன் விளைவாக, கேபின் க்ரூப் பணிகளுக்கு 45 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
வணிக விமானங்களில் பணிப்பெண்கள் UK இல் குறைந்தபட்சம் 18 வயதாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறும் வரை அதிக வயது வரம்பு இல்லை என தெரிவித்துள்ளார்.