உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அஸ்வினுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரரான அஸ்வின் சிறப்பாக விளையாடினால், அவருக்கு உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
இது நடந்தால், 2011 உலக கோப்பையில் விளையாடிய அஸ்வினும் கோலியும், 2023 உலகக்கோப்பையிலும் ஒன்றாக சேர்ந்து விளையாடினார்கள் என்ற பெருமை கிடைக்கும். இந்நிலையில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரிக்கும் உலக கோப்பையில் இணைவதற்கான வாய்ப்புள்ளது. இதுகுறித்து பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் அஸ்வினுடன் வாஷிங்டன் சுந்தரை ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்றும், இந்த உலக கோப்பையில் விளையாடுவதற்கு அஸ்வின் தான் சிறந்தவர் என்றும் அஸ்வினுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
ஆனால், இந்தியாவின் சுழல் பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங் மட்டும் அஸ்வினுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஏனென்றால், சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் சிங்கின் அதிக விக்கெட் ரெக்கார்டை அஸ்வின் முறையடித்தார். இதற்கு பொறாமைப்படும் விதமாகவே அஸ்வினுக்கு எதிராக அவர் கருத்து கூறியுள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
"வாஷிங்டன் சுந்தர் பவர் ப்ளேவில் சிறப்பாக பந்து வீசுவார். மேலும் அவருடைய ஃபீலிங் அட்டகாசமாக இருக்கும். அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும். எனவே ஒரு வீரர் உங்களுக்கு எல்லா வகையிலும் கை கொடுக்கும்போது, இவரை தவிரவிடக்கூடாது. மேலும் அஸ்வினை விட அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடுகிறார். இதனாலேயே ஆசிய கோப்பையில் அக்சர் பட்டேலுக்கு காயமானதும் வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட்டார். இதுமட்டுமின்றி அவர் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்றிருந்தார். இதனால் அஸ்வினை விட உலக கோப்பை விளையாடுவதற்கு வாஷிங்டன்தான் சிறந்தவர். அவர்தான் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்" என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இவரது கருத்துக்கு "இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு பொறாமை இருக்கக் கூடாது சார்" என பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.